சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

Vignesh Sivan-Vijay-Lokesh: நான் உண்டு என் வேலை உண்டுன்னு சிவனேன்னு தான இருந்தேன் இப்ப என்ன புது பஞ்சாயத்து என விக்கி நொந்து போகும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதோ அதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த லியோ அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.

அதனாலேயே இப்போது சோசியல் மீடியாக்கள் முழுவதும் அது பற்றிய செய்திகள் தான் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விக்னேஷ் சிவன் போட்ட ஒரு லைக் ட்விட்டர் தளத்தை அதிர வைத்துள்ளது. அதாவது லியோ படப்பிடிப்பில் விஜய்க்கும், லோகேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் பல குழப்பம் ஏற்பட்டதாகவும் ஒரு செய்தி காட்டு தீ போல் பரவியது.

Also read: தயங்கிய விஜய், கட்டாயப்படுத்திய லோகேஷ்.. ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் லோகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அது வெறும் வதந்தி தான். அந்த செய்தி வரும் போது நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாக அமர்ந்து தான் அதை படித்தோம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் இதற்கு முன்பாகவே இப்படி ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்த ரஜினி ரசிகரின் ட்வீட்டுக்கு விக்னேஷ் சிவன் லைக் போட்டிருந்தார்.

அது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் அந்த லைக்கை நீக்கி இருந்தார். இதை பார்த்த ரஜினி ரசிகர் விக்கி இப்படி செய்துவிட்டார் என்று ஒரு அலப்பரையை கூட்டி இருந்தார். இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்கள் உண்மை என்னன்னு தெரியாமல் எப்படி நீங்கள் லைக் போடலாம் என்று அவரை கடித்து குதறாத குறையாக விமர்சித்தனர்.

Also read: ஜெயிலர் வசூலை முந்தியே ஆகணும் எனக் கூறிய லலித்.. அசர வச்ச மாதிரி பதிலடி கொடுத்த லோகேஷ்

இவ்வாறு பிரச்சனை திசை திரும்புவதை உணர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது ஒரு நீண்ட பதிவை போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதாவது எனக்கு பிடித்த இயக்குனர் பற்றிய பதிவு என்பதால் அந்த வீடியோ என்ன என்பது தெரியாமலேயே நான் லைக் போட்டு விட்டேன். அதன் பிறகு தான் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது எனக்கு தெரிந்தது.

இதை எந்த உள்நோக்கத்தோடும் நான் செய்யவில்லை. தெரியாமல் நடந்து விட்டது. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை வைத்து விஜய் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் பிரச்சனை செய்ய வேண்டாம். உங்களைப் போல நானும் லியோ ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்த பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

vignesh sivan-tweet
vignesh sivan-tweet
- Advertisement -

Trending News