வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

Lokesh Nelson and Lawrance: தற்போது இருக்கும் இயக்குனர்களில் வாண்டட் இயக்குனராகவும், அதிகளவில் வசூலை கொடுக்கும் படங்களை எடுக்கக் கூடிய திறமைசாலியாகவும் வலம் வருகிறவர் லோகேஷ் மற்றும் நெல்சன். ஆரம்பத்தில் நெல்சன் படங்கள் காமெடியாகவும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியாகவும் இருந்தது. ஆனால் ஓரளவுக்கு பிரபலமானதும் வன்மத்தையும், ஆக்சன் படங்களையும் கொடுத்து மாஸ் இயக்குனராக இடம் பிடித்து விட்டார்.

இதே போல லோகேஷும் ஆரம்பத்தில் மாநகரம் போல் ஒரு அமைதியான படத்தை எடுத்து முக்கியமான கருத்துக்களை படமாக கொடுத்தார். அதன் பின் கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து அதிரடியான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யை வைத்து இரண்டாவது முறையாக லியோ படத்தை ஆக்ஷன் படமாக எடுத்து முடித்திருக்கிறார்.

Also read: விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

இப்படி இந்த இரண்டு இயக்குனர்களும் காலத்திற்கு ஏற்ப அவர்களுடைய படம் எடுக்கும் பாணியை மாற்றி மக்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் படங்களாக கொடுத்து வசூலில் அதிக லாபத்தை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்களைப் போல தான் இந்த காலத்தில் இருக்க வேண்டும். இவர்கள் எடுக்கக்கூடிய படங்கள் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் திரைக்கதை மற்றும் ஆக்ஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த பாதையை தான் நானும் பின்பற்ற போகிறேன். அப்படி இருந்தால் மட்டுமே இனி சினிமா உலகத்தில் ஜெயிக்க முடியும். தொடர்ந்து பயணிக்கவும் முடியும் என்று பகிரங்கமாக லாரன்ஸ் மாஸ்டர் ஒத்துக் கொண்டு லோகேஷ் மற்றும் நெல்சன் தான் எனக்கு இதில் தெய்வம் மாதிரி தெரியுறாங்க என்று கூறி இருக்கிறார்.

Also read: 1000 கோடி வசூலை தொடாம விட மாட்டேன் என கங்கணம் கட்டும் மாறன்.. மீண்டும் உருவாகும் நெல்சன் கூட்டணி

அதற்கு காரணமும் இவர்கள் இரண்டு பேரும் தான் தற்போது முன்னணி நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆட்டிப்படைக்கும் விதமாக மிக ஒய்யாரத்தில் இருக்கிறார்கள். அதனால் இனி இவர்களையே பாலோ பண்ணி நானும் வருகிறேன் என்று லாரன்ஸ் மாஸ்டர் கூறியிருக்கிறார். ஆனாலும் என்னதான் இவர் இப்படி வாய் நிறைய லோகேஷ் மற்றும் நெல்சனின் கதைகளை பற்றி பேசினாலும் அடுத்து காஞ்சனாவை வைத்து தான் உருட்ட போகிறார்.

ஏனென்றால் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் எல்லாத்துக்கும் உடனே வந்து விடாது. அதுவும் லாரன்ஸ் மாஸ்டர் மாதிரி ஒரு சாப்டான கேரக்டருக்கு வன்முறையை வைத்து எடுக்கக்கூடிய அளவிற்கு தியானியும் இருக்காது. இருந்தாலும் இவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ அதற்கேற்ற மாதிரி கதை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார் போல் தெரிகிறது. அதனால் இவர் அடுத்து எந்த மாதிரி படத்தை கொடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.

Also read: பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் பார்த்த சித்தா.. மரண அடி வாங்கிய லாரன்ஸ், ஜெயம் ரவி படம்

- Advertisement -

Trending News