கமலுக்கே கடிவாளம் போட்ட ஹாட்ஸ்டார்.. பிக்பாஸ் விட்டு விலகிய உண்மை காரணம்!

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவர் பிப்ரவரி 20ஆம் தேதி எபிசோட்டிற்க்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் கமலஹாசன் அரசியலிலும் சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிரமமாக தெரிந்ததால் அதில் இருந்து விலகப் போவதாக அந்த அறிக்கையில் காரணத்தை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கான ஓடிடி உரிமையை பெறுவதற்காக ஹாட்ஸ்டார் மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கி உள்ளது.

ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லையாம். ஏனென்றால் கமலஹாசன் விக்ரம் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பிக்பாஸில் இருந்து விலக கமலஹாசன் திட்டமிட்டு முழு நேரத்தையும் விக்ரம் படப்பிடிப்பிற்கு செலுத்தப் போகிறாராம்.

அதன் பிறகு பிக்பாஸில் மீண்டும் பங்கெடுப்பது குறித்து யோசிக்க உள்ளார். இருப்பினும் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இல்லையென்றால் அது ஹாட்ஸ்டாருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கப்போகிறது.

எனினும் கமல் வெளியிட்ட அறிக்கை மீண்டும் பிக் பாஸ் சீசன்6ல் சந்திப்போம் என குறிப்பிட்டிருப்பதால் விக்ரம் படத்தை முடித்துவிட்டு மீண்டும் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.