அரவிந்த்சாமிடம் 65 லட்சத்தை நாமம் போட்ட தயாரிப்பாளர்.. ஏமாற்றியவருக்கு கோர்ட் மூலமாக வைத்த செக்

Aravinthsamy: அரவிந்த்சாமியின் அழகுக்கும் நடிப்புக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பை கொடுத்து வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தில் பெண்களிடம் எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி தான் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அழகாலே அனைவரையும் கட்டி போட்டார்.

அப்படிப்பட்டவர் குறுகிய படங்களில் நடித்திருந்தாலும் நிறைவான ஒரு நடிகராக மக்கள் மனதில் பதிந்து விட்டு காணாமல் போய்விட்டார். பிறகு பல வருடங்கள் கழித்து தனி ஒருவன் படத்தின் மூலம் அபிமன்யு சித்தார்த் என்ற கேரக்டரை முன்னுறுத்தி நாயகனாக அடி எடுத்து வைத்தார். அதன் பின்னும் இவருடைய நடிப்பை மக்கள் எப்பொழுதும் ரசித்துப் பார்ப்பார்கள் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தார்கள்.

பணத்தை வாங்க போராடும் அரவிந்த்சாமி

அந்த வகையில் அரவிந்த்சாமிக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் 2018 ஆம் ஆண்டு அமலாபால், சூரி, ரோபோ சங்கர், நாசர் நடிப்பில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பார்ப்பதற்கு காமெடியான ஒரு ட்ராக்கை கொடுத்தது. இதில் அரவிந்த்சாமி நடித்ததற்காக இவரிடம் தயாரிப்பாளர் போட்ட ஒப்பந்தத்தின் படி சம்பளத்தில் இன்னும் 30 லட்சம் பாக்கிய கொடுக்கவில்லை.

இதனால் அரவிந்த்சாமி அந்த தயாரிப்பாளர் மீது கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார். அந்த வகையில் சம்பளம் பணம் 30லட்ச ரூபாய் பாக்கி என்றும், டிடிஎஸ் வரிபிடித்தம் செய்யப்பட்ட 27 லட்சத்தையும் முறையாக செலுத்தவில்லை என்றும், படம் வெளியீட்டுக்காக பெற்ற 32 லட்சம் ரூபாய் கடனையும் திருப்பி தரவில்லை என தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக நடிகர் அரவிந்த்சாமி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு போட்டிருக்கிறார்.

இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் அரவிந்தசாமிக்கு மொத்தமாக செலுத்த வேண்டிய 65 லட்சத்தை செலுத்தி விட்டு அதில் 18% வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் 27 லட்சம் டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று பட தயாரிப்பாளருக்கு 2019 ஆம் ஆண்டு உத்தரவு போட்டிருந்தது.

ஆனால் போட்டிருந்த உத்தரவை மதிக்காத தயாரிப்பாளர் எந்தவித பதிலும் தராததால் அவருடைய மொத்த சொத்துக்களை வைத்து எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என அரவிந்தசாமி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன்படி உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டிருந்தது.

இது குறித்து தயாரிப்பாளரின் நீதிபதி வேல்முருகன் விசாரணைக்கு வந்த பொழுது தனக்கு சொந்தமான எந்த சொத்துக்களும் இல்லை என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறார். இதை அடுத்து நீதிபதி, சொத்து எதுவும் இல்லை என்றால் திவாலானவர் என அறிவித்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என உத்தரவு விட்டு இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அரவிந்த் சாமிக்கு கிடைக்க வேண்டிய 65 லட்சம் பணத்தை மொத்தமாக நாமத்தை போட்டு விடலாம் என்று தயாரிப்பாளர் பிளான் பண்ணி விட்டார். ஆனால் அரவிந்த்சாமி கோர்ட் மூலமாக தயாரிப்பாளருக்கு வைத்த செக் அடிப்படையில் அவர் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார் என்பதை அடுத்த விசாரணையில் தெரிந்து கொள்ளலாம்.

அரவிந்த்சாமி பற்றிய சுவாரசிய தகவல்

Next Story

- Advertisement -