யோகிபாபு படத்திற்கு வந்த சோதனை.. வடிவேலு பெயரை மாற்றச் சொல்லி கொடுக்கும் டார்ச்சர்

தற்போது வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் கதாநாயகனாக நடித்து வருவதால் தற்போது வெளியாகும் எல்லா படங்களிலுமே காமெடி நடிகராக யோகி பாபு தான் நடித்து வருகிறார். மேலும் அவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஹீரோ, ஹீரோயின்கள் கால்ஷீட் கிடைத்து விடுகிறது.

ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட்டுக்காக படக்குழுவே காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் யோகிபாபுவும் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்து வெளியான மண்டேலா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருந்தது.

தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் வடிவேலு பிரண்ட்ஸ் படத்தில் நடித்த இந்த கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தின் பெயர் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

இதனால் மிகவும் பரிச்சியமான வடிவேலுவின் இந்த கான்ட்ராக்டர் நேசமணி என்ற பெயரை இப்படத்திற்கு வைக்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பெயரை மாற்றச் சொல்லி பிரச்சனை செய்து வருகிறதாம்.

வடிவேலின் ஃபேமஸ் கதாபாத்திரமான நாய் சேகர் பெயரை நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது படத்தில் பயன்படுத்தியிருந்தார். இதனால் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் படத்தின் பெயரை நாய் சேகர் ரிட்டன்ஸ் என வைத்துள்ளனர். இவ்வாறு வடிவேலுவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது யோகிபாபு நடித்துள்ள இப்படத்திற்கு பூமர் அங்கிள் என்ற தலைப்பை மாற்றி உள்ளார்களாம். படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது என்று இப்படத்தின் படக்குழுவினர்கள் யோசித்து வருகிறார்களாம். மேலும் எந்த டைட்டிலையாவது வைத்து முதலில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று யோகி பாபு தரப்பில் கூறுகிறார்களாம்.

Next Story

- Advertisement -