புகழை கைது செய்ய வந்த போலீஸ்.. விஜய் டிவி அரங்கத்தில் நடந்த சர்ச்சை சம்பவம்

Vijay Tv Pugazh: மக்களின் பொழுதுபோக்காக எத்தனை சேனல்கள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி மக்களை ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது மக்கள் அதிகமாக பார்த்து ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று சொல்லும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சீசன் 2வாக ஒளிபரப்பாகி வருகின்ற ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் விஜே விஷால் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

Also read: முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இதில் பங்கு பெறுவதற்கு விஜய் டிவி புகழ், மைனா, சுனிதா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

பொதுவாக விஜய் டிவி புகழ் பெண்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசுவதும், பழகுவதும், வழக்கமாக இருப்பது தான். ஆனால் முழுக்க முழுக்க இவர் மற்றவர்களை என்டர்டைன்மென்ட் பண்ணனும் என்ற நோக்கத்திற்காக நக்கல் அடித்து ஜாலியாக பேசக் கூடியவர்.

Also read: எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி

அந்த மாதிரி இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது திடீரென்று அரங்கத்திற்குள் புகழை கைது செய்வதற்கு போலீசார்கள் வந்து விடுகிறார்கள். இவர்களைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாகி ஒன்னுமே தெரியாத போல் என்னாச்சு மேடம் என்று விசாரிக்கிறார்கள். அதற்கு நாங்கள் புகழை கைது செய்ய வந்திருக்கிறோம்.

அவர் மேல் கம்பளைண்ட் வந்திருக்கிறது என்று போலீசார் கூறுகிறார்கள். இதைக் கேட்டதும் அங்கு இருப்பவர்கள் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் வாங்க என்ன விஷயம் என்று கூறுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு போலீசார் எங்களை கடமையை பண்ண விடுங்கள் என்று கோபத்துடன் சொல்கிறார்கள். இதை கேட்டதும் புகழ் இதெல்லாம் பார்க்க பிராங்க் மாதிரி இருக்கிறது. அப்படி ஏதாவது இருந்தால் முன்னாடியே சொல்லி தொலைங்க என்று டென்ஷனில் பேசுகிறார்.

Also read: தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி  மூட போகும் விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்