அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் அஜித்- ஷாலினி. அப்போது இருந்த மாதிரியே இப்போது வரை இந்த காதல் ஜோடி எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்திடம் இருக்கக்கூடிய ஒரே ஒரு கெட்ட பழக்கத்தை ஷாலினியால் இப்போது வரை மாற்ற முடியவில்லை.

இதை அஜித்துடன் நெருங்கி பழகிய பிரபல இயக்குனர் ஒருவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நாளைக்கு என்ன தேவை என்பதை நினைத்து கொஞ்சம் கூட சேமிப்பு வைக்காத நடிகர்தான் அஜித். அது மட்டுமல்ல ரொம்ப தியாக குணம் கொண்டவர்.

Also Read: பொன்னம்பலம் கேட்ட ஒரு விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித் செய்த சம்பவம்

அவர் ஆசை படத்தில் நடிக்கும் போது வெறும் 25 ஆயிரம் மட்டும் தான் சம்பளம். அந்த சம்பளம் வாங்கும் போது இருந்த அஜித்துக்கும், இப்போது 100 கோடி சம்பளம் வாங்கும் அஜித்துக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். இவ்வளவு சம்பளம் வாங்கும் அவர், நாளை என்ன செய்வது! இந்த பணத்தை சேமித்து வைக்க வேண்டும், ஒழித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அஜித்துக்கு என்னைக்குமே கிடையாது.

தன்னுடன் இருப்பவர்களின் நலன்களில் அக்கறை கொள்ளக்கூடிய பறந்த மனம் கொண்டவர். இந்த குணம் ஷாலினியை திருமணம் செய்து கொண்டும் மாறவில்லை. இதையெல்லாம் அஜித்துடன் ஆசை, வாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Also Read: மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட அஜித்.. அப்பாடி மொத்த கண்டத்தில் இருந்தும் தப்பித்த மகிழ்திருமேனி

தற்போது மாரிமுத்து சன் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் சிடுசிடுவென இருக்கும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அஜித்துடன் ஆரம்ப காலகட்டத்தில் நெருங்கி பழகியவர் என்பதால் அவரைக் குறித்த பல சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து பேட்டிகளின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

அதிலும் அஜித்துக்கு இருக்கக்கூடிய ஒரே கெட்ட பழக்கம், தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத குணம் தான். அதை ஷாலினியாலும் இப்போது வரை மாற்ற முடியவில்லை என்று கூறி இருப்பது தல ரசிகர்களை மேலும் கெத்து காட்ட வைக்கிறது.

Also Read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

Next Story

- Advertisement -