சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அர்ஜுன் காதலித்த ஒரே ஒரு நடிகை.. டாடா காட்டிவிட்டு மாஸ் நடிகரை கல்யாணம் பண்ணிய ஹீரோயின்

அதிகமான சண்டைக் காட்சி திரைப்படங்களில் நடித்து ‘ஆக்சன் கிங்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் அர்ஜுன், 90களில் டாப் ஹீரோவாக வலம் வந்தார். இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து இவர் மீது எந்த ஒரு கிசுகிசுகளும் வந்ததே கிடையாது.

கடைசியாக இவர் நடித்த நிபுணன் படத்தில், இவர் மீது மீ டூ புகார் கூறப்பட்டது. நிபுணன் படத்தில் நடித்த பொழுது சில காட்சிகளில் இறுக்கி கட்டிப்பிடித்தார், தனியாக அறைக்கு கூப்பிட்டார், உடல் ரீதியாக டார்ச்சர் கொடுத்தார் என அந்த படத்தில் அர்ஜுனுடன் கதாநாயகியாக இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அடுக்கடுக்காக பல புகார்களை அளித்தார்.

Also Read: 7 படங்களில் ஐந்து சூப்பர் ஹிட்.. கேடு கெட்ட பழக்கத்தால் கேரியரை தொலைத்த மனிஷா கொய்ராலா!

ஆனால் அது உண்மை இல்லை என அர்ஜுன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த நடிகையும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் ஆரம்பத்தில் அர்ஜுன் நடிகை நளினியை உருகி உருகி காதலித்ததாக கூறப்படுகிறது.

நளினியுடன் அர்ஜுன் 1985 ஆம் ஆண்டு அடுத்தடுத்து வெளியான எங்கள் குரல் மற்றும் திகில் நிறைந்த திரில்லர் படமான ‘யார்’ போன்ற படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரியை உருவாக்கியது.

Also Read: விஜய்யுடன் மோத தயாரான அர்ஜுன்.. லியோ படத்தைப் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்

இந்த இரண்டு படங்களில் இணைந்து நடிக்கும் போது அர்ஜுனுக்கு நளினி மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. அவரை மனதார காதலித்த அர்ஜுன், கடைசிவரை நளினியிடம் தன்னுடைய காதலை சொல்லவில்லை. ஆனால் நளினி அந்த சமயத்தில் டாப் நடிகராக கலக்கிக் கொண்டிருந்த ராமராஜனை காதலித்தார்.

அர்ஜுனின் காதல் ஒருதலை காதலாகவே போனது. அதன்பின் நளினி ராமராஜனை காதலித்து செட்டிலாகி விட்டார். இவர்களது திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் மிக எளிமையான முறையில் நளினி- ராமராஜன் திருமணம் நடைபெற்றது.

Also Read: ஊருக்கு தான் உத்தமன், பொண்ணுங்க விஷயத்துல அர்ஜுன் ரொம்ப வீக்கு.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

- Advertisement -

Trending News