Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் மோத தயாரான அர்ஜுன்.. லியோ படத்தைப் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்

லியோ படத்தைப் பற்றி அர்ஜுன் சொன்ன சுவாரசியமான தகவல்.

லோகேஷ், விஜய் கூட்டணியில் தயாராகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது உச்சத்தில் உள்ளது. ஏனென்றால் இந்த படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை குறித்து அப்டேட் தினமும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் லியோ படத்தில் நடிக்கும் பிரபலங்கள் இந்த படத்தை பற்றி ஏதாவது சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது லோகேஷின் முந்தைய படங்களான
விக்ரம் மற்றும் கைதி படத்தை நான் பார்த்து வியந்துள்ளேன்.

Also Read : விஜய்க்கு போன் போட்ட யாஷ்.. ராக்கி பாய் சொன்னதை கேட்டு துள்ளி குதித்த தளபதி

இப்போது எல்லோருமே கமர்ஷியல் படங்கள் தான் எடுத்து வந்தாலும் லோக்கேஷின் ஸ்டைல் மொத்தமாக வேறு மாதிரி உள்ளது. மேலும் லியோ படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் உடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். இதற்கு முன்பு இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில்லை என்ற அர்ஜுன் கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே மங்காத்தா படத்தில் பிரித்வி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அர்ஜுன் மிரட்டி இருப்பார். இதே போன்ற கதாபாத்திரத்தை லியோ படத்திலும் எதிர்பார்க்கலாமா என்று செய்தியாளர் அர்ஜுனிடம் கேட்டிருந்தார். அதற்கு மக்கள் எனக்கு கொடுத்த டைட்டிலை ஈடுகட்டும் விதமாக லோகேஷ் இந்த படத்தை எடுக்கிறார்.

Also Read : விஜய்க்கு போன் போட்ட யாஷ்.. ராக்கி பாய் சொன்னதை கேட்டு துள்ளி குதித்த தளபதி

கண்டிப்பாக இதுவரை என்னை யாரும் இந்த கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அர்ஜுன் கூறியுள்ளார். ஏற்கனவே லியோ படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுக்கப்பட உள்ளதாக செய்தி வெளியான நிலையில் விஜய்க்கு வில்லனாக தற்போது அர்ஜுன் நடிக்கிறார் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

மேலும் அர்ஜுன் போல இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் போன்றோரும் வில்லனாக தான் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லியோ படத்தைப் பற்றி அடுத்தடுத்து சுவாரசியமான தகவல் வெளியாகி வருவதால் இப்போதே இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

Also Read : லியோக்கு அடுத்த ஆப்பு ரெடி.. விஜய்யை விடமால் செக் வைத்து துரத்தும் உதயநிதி

Continue Reading
To Top