காவியாவின் காதலைத் தெரிந்துகொண்ட அடுத்த நபர்.. வசமாக சிக்கிய மருமகள்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காதலர்களாக இருந்த காவியா மற்றும் ஜீவா இருவரும் எதிர்பாராமல் பிரிந்த நிலையில், குடும்பத்திற்காக காவியா பார்த்திபனையும், ஜீவா ப்ரியாவையும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் காவியா-ஜீவா காதல் விஷயம் ஏற்கனவே காவியாவின் அம்மா மற்றும் ஜீவாவின் மாமா இருவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் தற்போது காவியாவின் மாமியாருக்கும் தெரிந்துவிட்டது. அதாவது காவியாவின் மாமியார் தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்றபோது அங்கு காவியாவின் மாமியார் உடைய தோழி, ஏற்கனவே காவியாவை ஜீவாவுடன் பார்த்திருக்கிறார்.

இதனால் அவர் காவியாவின் மாமியாரிடம், ‘உன்னுடைய மருமகள் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து இருக்கிறார்’ என ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காவியாவின் மாமியார் காவியாவை தனியே அழைத்து ஒரு அறைக்கு சென்று அங்கு காவியாவிடம், ‘நீ திருமணத்திற்கு முன்பு வேறு யாரையும் காதலிக்கிறாயா?’ என கேட்கிறார்.

இதற்கு காவியா, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி நிற்கிறார். இருப்பினும் காவியா, ஜீவாவை காதலித்தை நிச்சயம் அவருடைய மாமியாரிடம் தெரிவிக்க மாட்டார். ஏனென்றால் இதில் காவியாவின் அம்மா அப்பா உடைய மான சம்பந்தப்பட்டது என்பதால் அதை எப்படியாவது மறைத்து விடுவார்.

ஆனால் காவியா திருமணத்திற்கு முன்பு ஜீவாவை காதலித்த விஷயத்தை எல்லோரிடமும் தெரிவித்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. காவியாவின் வாழ்க்கை முழுவதும் இந்த பிரச்சனை துரத்திக் கொண்டே தான் இருக்கும். இதனால் காவியா மட்டுமல்ல அவளுடைய குடும்பத்தினரும் என்றாவது ஒருநாள் தலை குனிய தான் போகின்றனர்.

இருப்பினும் காவியா பார்த்திபனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக துவங்கியிருக்கிறார் அதேபோல் ஜீவாவும் பிரியாவுடன் வாழ முயற்சிக்கிறார். இருப்பினும் ஜீவா-காவியா இருவரின் காதல் விவகாரம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வரிசையாக தெரிந்து கொண்டிருக்கிறது.

Next Story

- Advertisement -