திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகிய முத்து.. மீனாவை உதாசீனப்படுத்திய குடும்பம், உண்மை மறைத்த ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், எல்லா விஷயத்தையும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பல விஷயங்களில் சொதப்புவதே மீனாவுக்கு வேலையா போய்விட்டது. அந்த வகையில் ரோகிணிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இரண்டாவது குழந்தைக்கு முயற்சி எடுத்து வருகிறார் என்பது சீதா மூலம் தெரிந்து விட்டது.

ஆனால் இதை காதும் காதுமாக மனதிற்குள் வைத்து ரோகிணிக்கு எதிரான விஷயங்களை சேகரிக்கும் விதமாக ஆதாரங்களை ரெடி பண்ணிவிட்டு அதன் பின் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி இருந்தால் ரோகிணி யாரிடமும் தப்பித்துக் கொள்ள முடியாமல் மாட்டிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்கு மாதிரி மீனா, சுருதியிடம் உளறி வைக்கிறார்.

முழு பூசணிக்காய் சோத்துக்குள் மறைத்த ரோகிணியின் ட்ராமா

உடனே ஸ்ருதி இந்த விஷயத்தை ரவியிடம் சொல்ல, ரவி அதை முத்துவிடம் சொல்ல, முத்து சும்மா இல்லாமல் அண்ணாமலை இடம் நேரடியாக இதைப் பற்றி பேசி விடுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான அண்ணாமலை, விஜயாவை கூப்பிட்டு என்ன ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்திருக்கிறது உனக்கு ஏதாவது இதைப் பற்றி தெரியுமா என்று கேட்கிறார்.

விஜயாவிற்கு ரோகினி பிடிச்ச மருமகள் என்பதால் ஆரம்பத்தில் நம்பாமல் என் மருமகளை பற்றி என்னிடமே தவறாக சொல்கிறீர்களா என்று கோபப்பட்டு பேசினார். அதன் பின் இதைப் பற்றி தெரியுமா என்று தான் கேட்டேன், என்று சொல்லிய நிலையில் விஜயா உடனடியாக ரோகிணியை கூப்பிட்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

ரோகினிக்கு சும்மாவே பொய்யும் பித்தலாட்டமும் பண்ணுவது கைவந்த கலை. அந்த வகையில் இப்படி ஒட்டுமொத்த குடும்பத்தின் முன் மாட்டி விட்டோமே என்று முழு பூசணிக்காய் சோற்றுக்குள் மறைப்பது போல் எதுவுமே இல்லாதது போல் மறைக்கப் போகிறார். அத்துடன் ஒரு கரு கலந்ததை வைத்து டிராமாவை போட்டு அனைவரிடமும் பரிதாபத்தையும் பெறப்போகிறார்.

வழக்கம்போல் அந்த குடும்பமும் ரோகிணி மேல் எந்த தவறும் இல்லை என்று தலையில் தூக்கி வைத்து ஆட போகிறார்கள். அத்துடன் மீனா, ரோகினி மீது பொறாமை பட்டு தான் இந்த மாதிரி தவறான கருத்துக்களை சொல்கிறார் என்று விஜயா அப்படி கதையை திசை திருப்பப் போகிறார். உடனே ஒட்டுமொத்த குடும்பமும் மீனா சொல்வதை உதாசீனப்படுத்தி அடுத்தடுத்த வேலையை பார்க்கப் போகிறார்கள்.

ஆனால் மீனா சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று முத்து இதனை தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணி வந்தால் ரோகிணி அனைவரிடமும் கையும் களவுமாக மாட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இதற்கிடையில் முத்து சவாரி ஏற்றிக்கொண்டு போன ஒரு பெண்மணி பிரசவ வலியில் இருந்ததால் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக நேரமில்லை என்பதால் மார்க்கெட்டுக்கு நேரடியாக கூட்டிட்டு போய் தெரிஞ்ச அக்கா மூலம் பிரசவத்தை பார்த்து தாயும் சேயையும் கரெக்டான நேரத்தில் முத்து காப்பாற்றி இருக்கிறார்.

அத்துடன் அந்த குழந்தையை தன்னுடன் கையால் தூக்கி சந்தோஷமான தருணத்தை உணர்ந்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி முத்துவுக்கு பாராட்டு மலையாக வந்து கொண்டே இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News