Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு மீனா பூ கொண்டு போன இடத்தில் ரோகிணி பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொண்டார். அதாவது அடிக்கடி ரோகிணி அந்த ஹாஸ்பிடலுக்கு போய் செக்கப் பண்ணுவதற்கான காரணம் முதல் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆனதால் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதற்கு ஏதாவது பிரச்சினை வருமா என்று கேட்பதற்காகத்தான்.
இந்த ஒரு விஷயம் சீதா மூலம் மீனாவிற்கு தெரிந்து விட்டது. என்னது ரோகிணிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்ததா என்ற அதிர்ச்சியில் மீனா குழப்பம் அடைந்து விட்டார். இந்த ஒரு விஷயத்தை யாரிடம் சொல்லலாம் மீனா குழப்பத்திலேயே இருக்கும் பொழுது சுருதி, மீனாவிடம் ஏன் என்னாச்சு உங்க முகமே சரியில்லை ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்.
நல்ல சந்தர்ப்பத்தை சொதப்பி ரோகினியை தப்பிக்க விட்ட மீனா
அப்பொழுது மீனாவிற்கு வேறு வழியில்லாததால் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சுருதியிடம் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஆனால் நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி ஆஸ்பத்திரியில் ரோகிணி பற்றி கேட்ட விஷயத்தை சொல்லிவிட்டார். உடனே ஸ்ருதியும், என்னது ரோகிணிக்கு குழந்தை இருக்கிறதா என்று அவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
பிறகு இந்த ஒரு விஷயத்தை சுருதி, ரவியிடம் சொல்லிவிட்டார். ரவி நம்ப முடியாமல் அதிர்ச்சியாக கேட்ட நிலையில் இதை மீனா அக்கா தான் சொன்னாங்க என்று சொன்னதும் யாரிடமும் இப்போதைக்கு இந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் சுருதி சொன்ன அடுத்த நிமிஷமே ரவி, முத்துவிடம் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்.
முத்து உடனே இதை அண்ணாமலை இடம் சொல்லி அண்ணாமலையும் அதிர்ச்சியாகி நின்றார். பிறகு அண்ணாமலை, இதைப்பற்றி விஜயாவிடம் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு விஜயா, ரோகினி நம்ம வீட்டு மருமகள் அவளைப் பற்றி நம் தப்பாக பேசினால் நல்லதாக இருக்குமா? என்று அண்ணாமலை இடம் கோபப்படுகிறார்.
இந்த விஷயத்தை கேட்ட பிறகு விஜயா ஆத்திரப்பட்டு ரோகினி கூப்பிட்டு இதற்கு முன் நீ கர்ப்பமாக இருந்தாயா என்று கேட்கிறார். அப்படி கேட்கும்போது ஒட்டுமொத்த குடும்பத்தில் இருப்பவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆக மொத்தத்தில் யாருக்கும் தெரியக்கூடாது சொல்லக்கூடாது என்று சொல்லி அனைவருக்கும் தெரியும்படி ரோகிணி பற்றிய விஷயம் வெளிவந்து விட்டது.
ஆனாலும் ரோகிணி இதெல்லாம் அசால்ட்டு என்று சொல்வதற்கு ஏற்ப எல்லாத்தையும் மறைத்து ஆமாம் நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் அது கருவளையயே கலைந்து விட்டது. இதைப் பற்றி யாரிடமும் நான் சொல்லவில்லை. சொன்னால் நீங்கள் எல்லோரும் வருத்தப்படுவீர்கள்.
எதற்கு என்னால் உங்களுக்கு கஷ்டம் என்று நினைத்து தான் நான் யாரிடமும் சொல்லாமல் நானே அந்த வேதனையை அனுபவித்து துக்கத்தை மனதுக்குள்ளே போட்டு துடைத்து விட்டேன் என்று மிகப்பெரிய டிராமாவை சென்டிமென்டாக போட்டு அனைவரையும் நம்ப வைத்து பரிதாபத்தை ஏற்படுத்தப் போகிறார்.
இதைக் கேட்டு அனைவரும் மக்கு மாதிரி ரோகிணி மீது பரிதாபப்பட்டு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் போகிறார்கள். அடுத்து வழக்கம்போல் விஜயா, இதற்கெல்லாம் காரணம் இந்த மீனாதான் என்று திட்டி கோபப்பட்டு சண்டை போட போகிறார்.
அது மட்டும் இல்லாமல் மீனா மற்றும் முத்து இந்த வீட்டில் இருக்கும் வரை நமக்கு டேஞ்சர் தான் என்று ரோகிணி நினைத்து அவர்களை வீட்டை விட்டு அனுப்புவதற்கு பிளான் பண்ணப் போகிறார். ஆக மொத்தத்தில் கடைசி வரை ரோகிணி பற்றி எந்த ஒரு விஷயமும் வெளிவர போவதில்லை.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மதுக்கு அடிமையாகிய முத்துவை பார்த்து சந்தோஷப்படும் விஜயா
- திருந்தாத மீனாவிற்கு ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து கொடுத்த பதவி
- ரோகினியை நம்பி நடுத்தெருவுக்கு போகும் மனோஜ்