பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பிக்கு பெரிய ஆப்பு.. விலகப் போகும் முக்கிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இந்த காலத்திலும் கூட்டு குடும்பத்தில் சந்தோஷமாக வாழ முடியும் என மக்களுக்கு உணர்த்தும் விதமாக இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளனர். ஆரம்பத்தில் இத்தொடரில் முல்லையாக விஜே சித்ரா நடித்திருந்தார். அவருடைய இழப்பு பலரையும் கவலையில் ஆழ்த்தியது.

மற்ற யார் நடித்தாலும் முல்லையாக ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் கூறிவந்தனர். அதன்பிறகு காவியா அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இத்தொடரில் மூத்த அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின். இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் 7 சி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்குனர் பாரதிராஜா குடும்பத்தில் இருந்த திரைத்துறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினால் ஸ்டாலின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமானார். ஒரு மூத்த பொறுப்புள்ள அண்ணனாக குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என பலருக்கும் முன்னுதாரணமாக இத்தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் தற்போது கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் பச்சைக்கிளி சீரியலில் நடிக்க உள்ளார். இத்தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இத்தொடரிலும் ஒரு மூத்த அண்ணனாக தான் ஸ்டாலின் நடிக்கிறார். அதாவது இரண்டு தம்பி, ஒரு தங்கையின் அண்ணனாக நடிக்கயுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஸ்டாலின் விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஸ்டாலின் விலகினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி வெகுவாக குறையும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Next Story

- Advertisement -