ஜனனியை கதறவிட்ட ஹவுஸ் மேட்ஸ்.. சைடு கேப்பில் கனகச்சிதமாய் காய் நகர்த்தும் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்சுகளுக்கு இடையே நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் தங்களைப் பற்றிய விஷயங்களை கூற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஒருவர் தங்கள் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இடையில் எப்போது வேண்டுமானாலும் அதை நிராகரிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதற்காக மூன்று பஸ்ஸர் அங்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவதாக அசீம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பற்றி பேச ஆரம்பித்தார். ஆனால் சில நிமிடங்களிலேயே போட்டியாளர்கள் அதை நிராகரித்தனர். அதன் பிறகு ஜனனி தன்னை பற்றி கூற வந்தார்.

Also read:மணிகண்டனை ஓரம் கட்டி கலக்கிய தனலட்சுமி.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

ஆனால் அவர் பேசும் நேரம் வருவதற்கு முன்பே தனலட்சுமி நான் நிராகரித்து விடுவேன் என்று கூறினார். அதற்கு மணிகண்டன் கதையை கேட்காமலே இப்பவே ரிஜெக்ட் செய்வேன் என நீ சொல்வது தவறு என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜனனிக்கான நேரம் வந்தது. அப்போது அவர் கதை சொல்ல ஆரம்பித்த உடனேயே விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா மூவரும் பஸ்ஸரை அழுத்தி அவரை நிராகரித்தனர்.

கதையை ஆரம்பிக்கும் முன்பே இப்படி நடந்ததால் ஜனனியின் முகம் அப்படியே வாடிப் போய்விட்டது. இருந்தாலும் சமாளிப்பாக சிரித்துக்கொண்டே வந்தார். ஆனாலும் அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதுவிட்டார். உடனே வீட்டில் இருக்கும் அனைவரும் பதறிப் போய் அவரை சமாதானப்படுத்த வந்தனர்.

Also read:பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

ஒருவர் தன் மனதில் இருக்கும் வலிகளை பகிர்ந்து கொள்ள முற்படும் போது இவ்வாறு நிராகரிக்கப்படுவது எந்த அளவுக்கு வேதனையை தரும் என்பது ஜனனியை பார்க்கும் போது தெரிந்தது. அப்படி அழுது கொண்டிருக்கும் அவரை ரட்சிதா கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினார். அப்போது சைடு கேப்பில் லீலை மன்னன் அசல் ஜனனியை சமாதானப்படுத்த ஓடோடி வந்தார்.

வந்தவர் சாதாரணமாக அவரை சமாதானப்படுத்தாமல் ஜனனியின் கண்ணீரைத் துடைக்க தான் கட்டியிருந்த கைலியை எடுத்து அவர் கண்ணை துடைத்து விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜனனி ஜெர்க் ஆகி நீ சமாதானப்படுத்த வேண்டாம். நான் அழவே இல்லை என்பது போல் தானே கண்ணீரை துடைத்துக் கொண்டார். இதைத்தான் தற்போது ரசிகர்கள் எங்க சம்பவம் நடந்தாலும் அசல் தன் வேலையில் கவனமாக இருக்கிறார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read:அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

Next Story

- Advertisement -