இப்போதுள்ள ட்ரெண்டுக்கு மாறி வரும் 5 ஹீரோக்கள்.. இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராமராஜன்

ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஹீரோக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஆனால் பல வருடம் கழித்து மீண்டும் தங்களது செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளனர். அவ்வாறு இப்போது உள்ள ட்ரெண்டிங்க்கு ஏற்றார் போல் மாறி வரும் 5 ஹீரோக்களை பார்க்கலாம்.

ராமராஜன் : தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 10 வருடங்கள் கழித்த மீண்டும் கதாநாயகனாக ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : ராமராஜன் ரீ என்ட்ரி படத்திற்கு வந்த ஆபத்து.. சாமானியன் என்ற டைட்டிலில் நடந்த துரோகம்!

மோகன் : மிகக் குறுகிய காலத்திலேயே அதிக வெள்ளி விழா படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகன் என்ற பெயருடன் வலம் வந்தவர் மைக் மோகன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இப்போது சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற படத்தில் மோகன் கதாநாயகனாக நடித்த வருகிறார்.

பிரசாந்த் : அந்த காலகட்டத்தில் விஜய், அஜித்துக்கு இணையாக பார்க்கப்பட்ட நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அந்தகன் என்கின்ற படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார்.

Also Read : பிரசாந்த் படத்தை தவறவிட்ட விஜய்.. தளபதி நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்

கார்த்திக் : நவரச நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை, மௌன ராகம், கிழக்கு வாசல், வருஷம் 16, அக்னி நட்சத்திரம் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. ஹீரோவாக நடித்து அசத்திய கார்த்திக் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ராஜ்கிரண் : ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தவர் நடிகர் ராஜ்கிரண். இவர் தற்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் மாறி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பான்மையான படங்களில் ஹீரோக்களுக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.

Also Read : காலில் விழுந்து சரண்டரான தம்பதிகள்.. இறங்கி வர யோசிக்கும் ராஜ்கிரண்

Next Story

- Advertisement -