திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடப்பட்ட சீரியல்.. கோபிக்கு போட்டியாக பாக்கியலட்சுமியில் என்ட்ரி கொடுக்கும் ஹீரோ

விஜய் டிவி தொடர்கள் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அப்படி சில மாதங்களாக டல்லாக தொடர்கள் சென்று கொண்டிருந்தால் பாதியிலேயே முடித்து விடுவார்கள். அப்படி தான் பிரபல ஹீரோவை வைத்து பிரைம் டைமில் ஒரு தொடரை எடுத்து வந்தனர். ஆனால் அந்த தொடருக்கு டிஆர்பி கிடைக்காததால் பாதியிலேயே ஊத்தி மூடப்பட்டது.

இப்போது அந்த வெள்ளித்திரை நாயகன் பாக்கியலட்சுமி தொடரில் களம் இறங்கி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாக்யா மற்றும் அவரது சக்காளத்தியான ராதிகாவுக்கும் குடுமிபிடி சண்டை வரும் அளவிற்கு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.

Also Read : குணசேகரனை அவமானப்படுத்திய ஜான்சி ராணி.. எதிர்நீச்சலில் கரிகாலனை அந்தரத்தில் விட்ட ஆதிரா

அதாவது சமையல் காண்ட்ராக்ட்க்காக ராதிகா ஆபீஸ்க்கு சென்ற பாக்யாவுக்கு அவமானம் நேர்ந்துள்ளது. இங்கிலீஷ் தெரியாது என பாக்யாவை குத்திகாட்டி ராதிகா ஏளனமாக பேசுகிறார். இதனால் பொங்கி எழுந்த பாக்யா நானும் இங்கிலீஷ் கற்றுக்கொள்வேன் என சபதம் விட்டு செல்கிறார்.

அப்போதுதான் கோபிக்கு போட்டியாக வெள்ளித்திரை ஹீரோ ரஞ்சித் என்ட்ரி கொடுக்கிறார். மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்த ரஞ்சித் அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொடரில் நடித்தார்.

Also Read : மண்டையில இருந்த கொண்டையை மறந்த பாக்கியலட்சுமி.. கதை இல்லாமல் உருட்டும் விஜய் டிவி

இப்போது மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பாக்யா மற்றும் ரஞ்சித்தின் சந்திப்பு முதலிலேயே ஆக்சிடென்ட்டாக முடிகிறது. பைக்கில் வரும் போது போன் பேசிக்கொண்டே வரும் பாக்யா தெரியாமல் ரஞ்சித்தின் பைக்கில் மோதுகிறார். மேலும் ரஞ்சித் உதவும் முன் வரும்போது தானாகவே பாக்யா கீழே இருந்து எழந்து விடுகிறார்.

இந்நிலையில் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு செல்ல முடிவெடுக்க உள்ளார். அங்கு ஆங்கில ஆசிரியரான ரஞ்சித் பாக்கியாவுக்கு உதவ உள்ளார். மேலும் ரஞ்சித்துடன் பாக்யா பழகுவதை பார்த்து கோபி வயித்தெரிச்சல் பட உள்ளார். இந்த தொடரில் ரஞ்சித் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் இன்று என்ட்ரி கொடுக்கிறார்.

Also Read : 2000 பேருக்கு பதில் சொல்லணும்.. பாக்யாவை அசிங்கப்படுத்திய ராதிகாவிற்கு நடக்கப் போகும் கதி

- Advertisement -

Trending News