மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த பரிசு.. விலை மட்டும் இத்தனை லட்சமா.?

Actor Udhayanidhi: பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜின் இயக்கத்தில் தற்போது மாமன்னன் படம் வெளியாகி இருக்கிறது. உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வடிவேலு உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் முதல் நாளிலேயே ஆறு கோடி வரை வசூல் செய்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளில் 4 கோடி வரை மட்டுமே வசூலித்திருந்தது. இப்படி வசூல் இறங்கு முகமாக மாறியதற்கு காரணம் படத்தில் இருக்கும் சில முரண்பாடான விஷயங்கள் தான்.

Also read: வாய்க்கிழிய பேசின பேச்சுக்கும் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. மண்ணை கவ்விய மாமன்னன்

மாரி செல்வராஜ் சொல்ல வந்த கருத்தை முறையாக சொல்லி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான், கீர்த்தி சுரேஷ் போன்ற யாரையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வார இறுதி நாளான இன்று கூட படத்தின் வசூல் சற்று மந்தமாக தான் இருக்கிறது.

இருப்பினும் தன்னுடைய கடைசி படத்தை மறக்க முடியாத அளவுக்கு இயக்கி கொடுத்த மாரி செல்வராஜுக்கு உதயநிதி தற்போது காஸ்ட்லியான ஒரு பரிசை கொடுத்து அசத்தி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: உருவ ஒற்றுமையிலும் பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த வில்லன்.. நடிப்பிலும் மிரட்டும் பீஸ்ட் பட நடிகர்

அந்த வகையில் உதயநிதி இயக்குனருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். அதன் விலையே கிட்டத்தட்ட 40 முதல் 45 லட்சம் வரை இருக்கும். இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், ஏ ஆர் ரகுமான், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இப்பட வரவேற்பை கொண்டாடும் விதமாக கேக் ஒன்றை வெட்டி மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த தகவலும் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

Also read: அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்