இந்த வாரத்துல சந்திரமுகி 2, இறைவனை தும்சம் செய்த படம்.. கமலின் மகாநதி படத்தைக் கொண்டு உருவாக்கிய இயக்குனர்

Iraivan-Chandramuki 2: இன்று வியாழக்கிழமை மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளில் புது படங்கள் வெளியானது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம் சந்திரமுகி 2 மற்றும் இறைவன். வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களினால் காலதாமதமாக இன்று படத்தை வெளியிட்டனர். அதேபோல் சந்திரமுகி 2 படத்துடன் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் படமும் வெளியானது. ஆனால் இப்போது இந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

Also Read : கோவில் கோவிலா சுத்திய சந்திரமுகி, வேட்டையன் தேறுமா, தேறாத.? சாவு பயத்தை காட்டிய முழு விமர்சனம்

மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்த இந்த படங்கள் மண்ணை கவ்விய நிலையில் சைலன்டாக ஒரு படம் வந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதாவது அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் சித்தா படம் தான் அது. இப்போது சித்தா படத்திற்கு தான் ரசிகர்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கமலஹாசன் இந்த படத்தை பார்த்து விட்டு தனது விமர்சனத்தை கூறி இருக்கிறார். அதாவது இயக்குனர் அருண்குமார் மகாநதி படத்தை பார்த்து கவனம் ஈர்க்கப்பட்டு சித்தா படத்தை எடுத்திருக்கிறார். அதாவது குழந்தைகளுக்கு சிறு வயதில் வன்கொடுமை ஏற்படுவதை பற்றி மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ள கதை தான் சித்தா.

Also Read : Iraivan Movie Review- சைக்கோ கில்லரை தண்டிக்க இறைவன் அவதாரம் எடுத்தாரா.? ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஜெயம் ரவி பட திரை விமர்சனம்

ஆனால் எல்லாவற்றையும் திரையில் காட்டாமல் மிகவும் நாசுக்காக சொல்ல வேண்டிய விஷயத்தை இயக்குனர் கையாண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். கண்டிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகத்தான் இயக்குனர் சித்தா படத்தை கொடுத்திருக்கிறார். கமலும் இந்த படத்தால் கவனம் ஈர்த்துள்ளார்.

ஒரு படி மேலாக மகாநதி படத்தை விட இந்த படம் நன்றாக இருக்கிறது என ஆண்டவர் வாயால் பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் இந்த கதையை தேர்ந்தெடுத்து சித்தார்த் நடித்ததற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். பெரும்பாலும் கமர்சியல் படங்களை இயக்குனர்கள் கொடுத்து வரும் நிலையில் சமூக அக்கறை கொண்டு அருண்குமார் சித்தா படத்தை கொடுத்துள்ளார்.

Also Read : துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்