புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

27 வருடங்களுக்கு முன் அஜித்துக்கு ஏற்பட்ட சங்கடம்.. வளர்த்துவிட்டு அழகு பார்த்த வில்லன்

வலிமை திரைப்படத்தைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கும் அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகாலமாக 60 படங்களில் நடித்துள்ள அஜித், பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து ரசிகர்களின் மனதில் அல்டிமேட் நடிகராக இருக்கிறார்.

இருப்பினும் சினிமாவின் படிப்படியாக முன்னேறிய அஜித், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் பள்ளி மாணவராக சிறு வேடத்தில் நடிப்பை துவங்கி, அதன் பிறகு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் 1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

பிறகு பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஜித்துக்கு, 1995ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படத்தில் ஜீவானந்தம் ஆக நடித்ததுதான் அவர் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக அமைந்தது.

அந்த படத்தில் அவர் ரொம்ப ரொம்ப ஜூனியர். அவரைவிட பிரகாஷ்ராஜ் சீனியர். ‘நான் சினிமாவில் வளர்ந்து விடுவேனா?’ என்று அந்தப் படத்தின் சூட்டிங் நேரத்தில் அடிக்கடி அஜித், பிரகாஷ் ராஜிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.

‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று பிரகாஷ்ராஜ் அவரைத் தேற்றுவாராம். ஆனால் அந்த படத்தில் அஜித்தை விட நல்ல நடித்தது பிரகாஷ்ராஜ் தான். ஆனால் அஜித்தை விட சிறப்பாக நடிக்கிறேன் என்ற, எந்த ஒரு கெத்தும் காட்டாமல் அஜித்துக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர் துவண்டு போனபோது தேற்றி அவரை வளர்த்து விட்டார்.

அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன அஜித், பிற்காலத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த மங்காத்தா படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்த வாலி போன்ற படங்கள் நடிப்பதற்கு அது தான் காரணம் என்று கூறினார்.

- Advertisement -

Trending News