வாடி வாசல் தாண்டி வரும் மருமகள்கள்.. முட்டுக்கட்டை போடும் எதிர்நீச்சல் கதிர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தொடரில் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி ஆட்டம் ஆரம்பிக்க உள்ளது. இதில் குணசேகரன் மற்றும் உடன்பிறந்தவர்கள் எண்ணமே நன்றாக படித்த பெண்களை கல்யாணம் செய்வது. அதுமட்டுமில்லாமல் அவர்களை முழு நேரமும் வேலைக்காரி ஆக்கி அடிமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இவர்களிடம் இருந்து மருமகளை காப்பாற்றி அவர்கள் எண்ணம் போல் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்து வருவது ஜனனி மற்றும் அப்பத்தா. இத்தொடரின் நோக்கமே இன்றைய காலகட்டத்தில் கூட சில பெண்கள் அடிமையாக்கி வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் பெண்களை தைரியத்தோடு அவர்கள் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்பதே. அதற்கேற்றார்போல இந்த தொடரின் விமர்சனங்களும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

Also Read: குணசேகரனுடன் மோதும் சக்தி.. குத்தி கிளறி விட்டு, வாடிவாசல் மோதலாக மாறிய எதிர்நீச்சல்

இதன் விளைவாக அப்பத்தாவின் கிராமத்திற்கு பொங்கலை கொண்டாடுவதற்காக எல்லோரும் சந்தோசத்தில் இருந்து வருகிறார்கள். நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளையாய் எழுந்து வா. இந்த வரிகளுக்கு ஏற்ப எதிர்நீச்சல் தொடரில் உள்ள மருமகள்கள் சுதந்திரப் பறவையாக சிறகடிக்க தயாராகிவிட்டார்.

இவர்களின் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக இத்தொடரில் கதிர் என்பவர் தன் குழந்தையை மையமாக வைத்து அவர்களின் சந்தோஷத்தை தடுக்க நினைக்கிறார். இதற்கு அவன் அம்மாவும் கூட்டணி சேர்கிறார். ஆனால் அவர்களின் வாயை அடைக்கும் அளவிற்கு அப்பத்தாவின் அதிரடி பேச்சு அனலாய் பறக்கிறது.

Also Read: ஜனனி, ஈஸ்வரியை தொடர்ந்து எதிர்நீச்சல் போட்ட அடுத்த மருமகள்.. வாலை சுருட்டி கிட்டு இருக்கும் குணசேகரன்

ஆனால் எப்போதும் கெத்தாக இருந்து வரும் குணசேகரன் கொஞ்ச நாட்களில் டம்மி பீஸாக அடங்கி இருக்கிறார். அமைதிக்கு பின் புயல் வீசும் என்பதற்கு போல அவரின் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல குணசேகரன் அமைதியாக இருந்து காய் நகர்த்தி வருகிறார்.

அப்பத்தாவின் செயல்கள் மற்றும் ஜனனியின் போராட்டம் மற்ற மருமகள்களுக்கு கைகொடுக்குமா அல்லது குணசேகரன் சூழ்ச்சி வலையில் மாட்டிக் கொள்வாரா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Also Read: ஓசில உடம்பை வளர்க்காத.. எதிர்நீச்சல் குடும்பத்தையே கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அப்பத்தா

Next Story

- Advertisement -