பாண்டியனிடம் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் மருமகள்.. ஆக்ரோஷமான மீனா, சிக்க போகும் தங்கமயில்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், மகனுக்கு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கூட்டிட்டு வந்ததை விட வீட்டிற்கு தன் பேச்சைக் கேட்டு அடிமையாகும் ஒரு மருமகள் வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தங்கமயில், மாமனாரை தாஜா பண்ணி எல்லாருடைய விஷயத்திலும் மூக்கை நுழைத்து போட்டு கொடுத்து பாண்டியனிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார்.

இதனால் பாண்டியனை பொருத்தவரை முறைப்படி வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்த மருமகள் தான் என்றைக்கும் பெஸ்ட் என்ற ஒரு நினைப்பு வந்து விட்டது. அத்துடன் வீட்டுக்கு வரும் பொழுதே தங்கமயில் என்று மருமகள் பெயரை சொல்லிக் கொண்டு வருவது, மருமகள் சாப்பிட்டாளா என்று கேட்டு சாப்பிடவில்லை என்றால் கூப்பிட்டு உட்கார வைத்து சாப்பாடு போட்டு நல்லா சாப்பிடு என்று அனுசரிப்பது போன்ற விஷயங்களை பண்ணி கடுப்பேற்றுகிறார்.

மீனாவை கடுப்பேற்றிய தங்கமயில்

இதனால் கடுப்பான கோமதி தன்னிடம் என்னைக்கும் இப்படி ஒரு அனுசரனை பண்ணதே கிடையாது என்ற ஒரு கோபம் இருக்கிறது. இருந்தாலும் எதையும் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே கோபத்தை அடக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தங்கமயில் தான் இப்பொழுது அந்த வீட்டில் எல்லாம் என்கிற உரிமைக்கு வந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கதிர் ஆசை ஆசையாக முதல் முறையாக ராஜிக்கு ஒரு டிரஸ் வாங்கி கொடுத்து அழகு பார்க்கிறார். அந்த ட்ரெஸ்ஸை பார்த்ததும் ராஜிக்கு மிகப்பெரிய சந்தோசம் ஏற்பட்டு கதிர் மீது காதல் ரொமான்ஸ் வந்துவிட்டது. அடுத்ததாக தங்கமயில், புருஷன் சரவணன் இடம் உங்க தம்பி கதிர் இனி என்னிடம் மரியாதை குறைவாக பேசக்கூடாது என்று சொல்லி பேசுங்கள் என்று தூபம் போடுகிறார்.

இதைக் கேட்ட சரவணன், கதிரிடம் பேசப் போகிறார். ஆனால் கதிர் எதார்த்தமாக படும் கஷ்டத்தை தெரிந்து கொண்டு சரவணன் ஏதும் கேட்காமல் வந்து விடுகிறார். இதனால் இவர் என்ன இப்படி இருக்கிறார் என்று தங்கமயில் புலம்ப ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக மீனா மற்றும் செந்தில் வீட்டிற்கு வருகிறார்கள். வீட்டிற்கு வந்ததும் பாண்டியன் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.

அதுவும் அனைவரது முன்னாடியும் மட்டும் மரியாதை இல்லாமல் செந்திலை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்துகிறார். இப்படி பாண்டியன் அவமானப்படுத்தி பேசும்பொழுது அனைவரும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கவலையில் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கமயில் மட்டும் செந்திலை திட்டும் போது வாய் விட்டு சிரித்து மீனாவை கோபப்படுத்தி விட்டார்.

இதனால் ஆக்ரோஷமான மீனா, பாண்டியனிடம் கட்டன் ரைட்டாக பேசி விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த பாண்டியனின் கொட்டத்தை அடக்க முடியும். ஆனால் இந்த மீனா எதுவும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தினால் வாயை மூடிக்கொண்டு அமைதியாகிவிட்டார். ஆனாலும் ராஜி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மீனாவிடம் சொல்லிய பொழுது மீனாவிற்கு தங்கமயில் மீது மொத்த கோபமும் திரும்பி விட்டது.

இதனை அடுத்து மீனாவின் அடுத்த கட்ட வேலை தங்கமயிலை பற்றி உண்மைகளை கண்டுபிடிப்பது தான். அத்துடன் இனி தங்கமயிலுக்கு மீனா மற்றும் ராஜி எதிராக நின்று காய் நகர்த்தினால் இன்னும் இந்த நாடகம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -