மருமகள் பேச்சை கேட்டு பொண்டாட்டியை வெளுத்து வாங்கும் பாண்டியன்.. ராஜிக்காக சப்போர்ட் பண்ணி பேசும் கதிர்

Pandian stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு என்னமோ நாம் பார்த்து வைத்து கல்யாணம் பண்ணி வைத்த மருமகள் தான் தங்கம் என்று சொல்வதற்கு ஏற்ப தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அது மட்டுமில்லாமல் இத்தனை வருஷமா கட்டி கல்யாணம் பண்ணி மனைவியாக கூட இருக்கும் கோமதியை கொஞ்சம் கூட மதிக்காமல் அலட்சியமும் படுத்த ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தங்கமயில் கடைக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்ததையும், அவரால் தான் என்னமோ லட்சக்கணக்கில் லாபம் ஏற்பட்டு விட்டதாகவும் பெருமை பீத்திக் கொள்கிறார். இந்த தங்கமயிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறார். அப்படித்தான் பாண்டியன் கடை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் பணப்பையை கோமதியிடம் கொடுக்கிறார்.

பிரச்சனையை உண்டாக்கும் தங்கமயில்

அதை அடாவடியாக புடுங்கி நானே வைத்துக் கொள்கிறேன். அத்தைக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று ஓவராக பேசுகிறார். உடனே கோமதி அதெல்லாம் நான் பார்த்துகிறேன் என்று பணப்பையை புடுங்கி வைத்துக் கொள்கிறார். அத்துடன் கதிர் வேலை முடித்துவிட்டு இரவு சாப்பிட உட்காரும்பொழுது ராஜி மற்றும் கோமதி பரிமாறுவதற்கு நிற்கிறார்கள்.

ஆனால் இவர்களையும் தாண்டி தங்கமயில், கதிருக்கு சாப்பாடு பரிமாறுவதற்கு வந்துவிட்டார். உடனே கோமதி நீ போய் ரெஸ்ட் எடு ராஜி சாப்பாடு கொடுப்பாள் என்று சொல்கிறார். இதை புரிந்து கொள்ள தங்கமயில் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கதிருக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்து விட்டார். அப்பொழுது கோமதி, எல்லா விஷயத்திலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாத.

அவளுடைய புருஷனுக்கு அவள் சாப்பாடு கொடுத்து விடுவாள். நீ உன் வேலையை மட்டும் பாரு, சீக்கிரம் தூங்கினால் தான் காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு எல்லா வேலையும் பார்க்க முடியும் போய் தூங்கு என்று கோபமாக பேசி விடுகிறார். உடனே தங்கமயில் ரூமுக்கு வந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சரவணன் வந்த பொழுது என்னாச்சு என்று கேட்கிறார்.

அதற்கு உங்க அம்மா என்னை இப்படி எல்லாம் திட்டி விட்டார்கள் என்று நடந்ததை சொல்லுகிறார். உடனே சரவணன், அம்மா அப்படி எல்லாம் திட்ட மாட்டாங்க உன்னிடம் எடுத்துச் சொல்லி இருப்பாங்க. அம்மாவுடைய பேச்சை அப்படித்தான், மீனா மற்றும் ராஜிடமும் இப்படித்தான் அம்மா பேசும். ஆனால் அவர்கள் எதையும் பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் போய்விடுவார்கள். அதே மாதிரி நீயும் விட்டு விடு என்று சமாதானப்படுத்துகிறார்.

பிறகு மறுநாள் காலையில் பாண்டியன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் வந்து காபி கொடுக்கிறார். அப்பொழுது வழக்கம்போல் கதிர் மற்றும் பாண்டியன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் உள்ளே புகுந்து பாண்டியனுக்கு சப்போர்ட் பண்ணி கதிரை மட்டம் தட்டி பேசுகிறார். இதையெல்லாம் தாண்டி ராஜி டியூஷன் எடுப்பதையும் போட்டு கொடுத்து விடுகிறார்.

உங்க கிட்ட கேட்காமல் அவர்களே முடிவு எடுப்பதை எப்படி மாமா சரியாக இருக்கும். அதுவும் ராஜியின் குடும்பம் என்ன நினைப்பார்கள். ஏதோ ராஜி சம்பாதிச்சு தான் இந்த குடும்பத்தையே பார்க்கிறார் என்பதை போல் நினைப்பார்கள். ராஜிதான் உங்களிடம் சொல்லவில்லை என்றால் அத்தையும் உங்ககிட்ட சொல்லல என்கிற போது கஷ்டமாக இருக்கிறது என்று பாண்டியனிடம் வத்தி வைத்து விட்டார்.

உடனே பாண்டியன், கோமதி மற்றும் ராஜி கோவிலுக்கு போயிட்டு வந்ததும் ருத்ர தாண்டவம் ஆடும் வகையில் கோமதியை வெளுத்து வாங்குகிறார். அத்துடன் ராஜிடமும் கோபமாக பேசுகிறார். அப்பொழுது கதிர், ராஜி என்ன தப்பு பண்ணிட்டா, டியூஷன் எடுத்தது ஒரு தவறா என்று கேட்கிறார். ஆமா உனக்கு எதுவுமே தவறில்லை. உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கலாம், டியூஷன் எடுக்கலாம் அப்ப நான் எதுக்கு இங்கே இருக்கணும் என்று கோபமாக பேசுகிறார்.

கடைசி வரை பாண்டியன், கோமதி என்ன சொல்ல வருகிறார் என்று காது கொடுத்து கேட்காமல் திட்டிவிட்டு கடைக்கு போய் விடுகிறார். ஆனால் இதெல்லாம் கமுக்கமாக இருந்து காரியத்தை சாதிக்கும் தங்கமயிலின் உண்மையான சாயம் எப்பொழுது தான் வெளிவரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -