புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

ஒன்னு பிரியாணி செய்றாரு இல்ல கீழ விழுகுறாரு.. அஜித்தை விடாமல் வச்சு செய்யும் பிரபலம்

Actor Ajith: ஆனாலும் விடாமுயற்சி அப்டேட்டை தான் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று வெளியான ஒரு வீடியோ ரசிகர்களை பதட்டமடையச் செய்தது.

படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான அந்த வீடியோவில் அஜித் அதிவேகமாக கார் ஓட்டுகிறார். சிறிது நேரத்திலேயே அந்த கார் கவிழ்ந்து விடுவதும் படகுழுவினர் பதட்டத்தோடு ஓடி வருவதுமாக அந்த வீடியோ இருந்தது.

அஜித்தை கலாய்த்த அந்தணன்

இதுதான் இப்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதை பற்றி கூறியிருக்கும் வலைப்பேச்சு பிரபலம் அந்தணன், ஏங்க இதெல்லாம் ஒரு அப்டேட்டா என கலாய்த்துள்ளார்.

ஒன்னு பிரியாணி செய்றாரு இல்ல கீழ விழுகிறாறு. இத தாண்டி படத்தில் இருந்து ரசிகர்களுக்கு கொடுக்க அப்டேட் ஒண்ணுமே இல்லையா.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளிலிருந்து ஒரு போட்டோ கூடவா இல்லை. அதை கொடுத்திருந்தாலே ரசிகர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு பதட்டப்பட வைக்கும் படி இந்த வீடியோவை ஏன் வெளியிட வேண்டும். இதற்கு நீங்கள் அப்டேட் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என முடிந்தவரை அஜித்தை அவர் வச்சு செய்துள்ளார்.

Trending News