சிவகுமாரை மிரள வைத்த பொம்பள சிவாஜி.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Actor Sivakumar: மார்க்கண்டேய நடிகராக இருக்கும் சிவக்குமார் எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே பொருந்தி விடுவார். அவருடைய வசன உச்சரிப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அப்படிப்பட்ட அவரே ஒரு நடிகையின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டிய சம்பவமும் இருக்கிறது.

இப்படி சிவகுமாரை மிரள வைத்த நடிகை வேறு யாரும் கிடையாது. அவரின் மூத்த மருமகள் ஜோதிகா தான். ஆரம்பத்தில் சாதாரண ஹீரோயின் போல் வலம் வந்த இவர் சில வருடங்களுக்குப் பிறகு தன் திறமையை நிரூபிக்கும் வகையிலான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

Also read: நடிக்க தெரியாமல் பராக் பார்த்த நடிகை.. கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்த நடிகர் சிவக்குமார்

தற்போது திருமணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பிறகும் கூட ஜோதிகா நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். அப்படி அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த படங்களில் ஒன்றுதான் காற்றின் மொழி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக மைனா பட ஹீரோ விதார்த் நடித்திருப்பார்.

ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். அதில் ஜோதிகா குடும்ப தலைவியாக தன் பொறுப்புகளை உணர்ந்து நடித்திருப்பார். அந்த படம் வெளியான சமயத்தில் சிவகுமார், சூர்யா உட்பட குடும்பத்தினர் அனைவரும் தியேட்டரில் படம் பார்க்க வந்திருக்கின்றனர்.

Also read: பெரிய நடிகர் என்று சிவக்குமார் ஒத்துக் கொண்ட 2 ஹீரோக்கள்.. யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது

அப்போது விதார்த் குடும்பமும் வந்திருக்கிறார்கள். படம் முடிந்த பிறகு அனைவரையும் பாராட்டிய சிவகுமார் விதார்த் குடும்பத்தினரை வீட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி அவர்கள் வீட்டிற்கு சென்ற போது தன் மருமகளின் நடிப்பை பற்றி சிவகுமார் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினாராம். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு பொம்பள சிவாஜி என சிலாகித்து போய் பேசினாராம்.

இந்த விஷயத்தை விதார்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யா, ஜோதிகா காதலித்தபோது சிவக்குமார் அதை ஏற்கவில்லை என்று பல செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது அவருக்கு பிடித்த மருமகளாக மாறி இருக்கும் ஜோதிகா அவர் வாயாலேயே பொம்பளை சிவாஜி என சொல்ல வைத்திருக்கிறார்.

Also read: தியேட்டரை மிஸ் செய்த 5 ஹிட் படங்கள்.. கல்நெஞ்சையும் கரைய செய்த ஜெய் பீம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்