நடிக்க தெரியாமல் பராக் பார்த்த நடிகை.. கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்த நடிகர் சிவக்குமார்

80களில் ரஜினிகாந்த், கமலஹாசன்,உள்ளிட்டோர் ஒருபக்கம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும், இவர்களையே மிஞ்சும் அளவிற்கு சாந்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து வெற்றிக்கணடவர் தான் நடிகர் சிவக்குமார். இவர் 80களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் நடிப்பதையும் தாண்டி இவரது குணம் பலருக்கு பிடித்தமானது எனலாம்.

எப்போதுமே அமைதியாகவும், தன் மனதில் பட்டத்தை தைரியமாக பேசக்கூடியவராகவும், ஓவியராகவும் இருப்பவர். ஆரம்பத்தில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், கோடி கோடியாய் சம்பாதித்த சமயத்திலும், தான் வளர்ந்து வந்த பாதையை மறவாமல் தற்போது வரை தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்.

Also Read: எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஜென்டில்மேனாக வாழ்ந்த 5 நடிகர்கள்.. சிவக்குமாருக்கு முன்னோடியான ஆக்டர்

இவற்றுக்கெல்லாம் மேலாக இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாதவர். ஆனால் பல நடிகைகள் இவருக்கு திருமணமானது தெரிந்தும், இவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்துக்கொள்ள ஆசை தெரிவித்த சம்பவங்களும் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பெரிதாக கண்டுக்காத சிவக்குமார் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தார்.

மேலும் எல்லோரையும் மரியாதையுடனும், தன் கோபத்தை வெளிப்படுத்தாமல் பணிவுடனும் இருக்கும் இவரே பிரபல நடிகையை கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக 80களின் நடிகைகள் பலர் யூடியூப் மூலமாக தாங்கள் நடித்த படங்கள் குறித்து பேட்டிகளில் பேசி வருகின்றனர்.

Also Read: பெரிய நடிகர் என்று சிவக்குமார் ஒத்துக் கொண்ட 2 ஹீரோக்கள்.. யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது

அந்த வகையில் 80களில், ரஜினி, கமல், பாக்யராஜ், உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை சுலோக்ஷனா தன்னை சிவக்குமார் கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறியுள்ளார். இவரும், சிவக்குமாரும் இணைந்து குவா குவா வாத்துகள், இன்று நீ நாளை நான் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் அம்மா இருக்கா, படம் தான் இவர்கள் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்த படம்.

அப்போது சுலோக்ஷனா, சிவக்குமார் டயலாக்குகள் பேசும்போது எங்கேயோ பராக் பார்த்துக் கொண்டிருப்பாராம். இதனால் இவரை பன்னாடை என சிவகுமார் தீட்டியுள்ளாராம். இன்றுவரை தன்னை செல்லமாக இப்படித்தான் கூப்பிடுகிறார் என சுலோக்ஷனா கலகலப்புடன் கூறினார். மேலும் தனக்கான சிறந்த ஜோடி சிவகுமார் தான் என்றும், அவரது உயரம், எடை அனைத்தும் எனக்கேற்றார் போல் இருக்குமென கூறினார்.

Also Read: சிவக்குமாருக்கு கிடைக்காமல் போன 2 தேசிய விருதுகள்.. ஜெயித்துக் காட்டிய மாறன் சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்