என்னது பிரேம்ஜிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசா.? பிரபலம் போட்ட வெடிகுண்டால் தலைவலியில் புது மாப்பிள்ளை

Premji: சொப்பன சுந்தரிய யாரு வெச்சிருந்தா? பாகுபலிய கட்டப்பா ஏன் கொன்னாரு? போன்ற கேள்விகளை விட பிரேம்ஜிக்கு எப்ப கல்யாணம்? என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் இவருடைய திருமணம் எளிமையாக நடைபெற்றது.

வங்கி ஊழியரான இந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரேம்ஜி தற்போது புது மாப்பிள்ளை ஆக மாறியுள்ளார். இவருக்கு தற்போது 45 வயது நெருங்கியுள்ள நிலையில் மணப்பெண்ணுக்கு 25 வயது என்பதும் பெரும் ஷாக்காக இருந்தது.

20 வயது வித்தியாசத்தில் திருமணமா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களாகவே காதல் இருந்திருக்கிறது. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

பிரேம்ஜியின் திருமணம்

அதிலும் பிரேம்ஜி தன் மனைவி இந்துவை இன்ஸ்டாகிராம் மூலம் தான் சந்தித்திருக்கிறார். மெசேஜ் மூலமாக ஆரம்பித்த இவர்களின் நட்பு பிறகு காதலாக மாறியிருக்கிறது.

இதை பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி இந்து வங்கியில் பணிபுரியும் சாதாரண ஏழை குடும்பத்து பெண் என்றும் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் ஒரு வழியாக பிரேம்ஜி குடும்பஸ்தனாக மாறிவிட்டார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவருக்கும் அவருடைய மாமியாருக்கும் ஒரே வயது தான்.

இதை அந்தணன் இப்போது நண்பர்கள் கூட இதை சொல்லி அவரை கிண்டல் அடிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். உண்மையில் பிரேம்ஜிக்கும் அவருடைய மாமியாருக்கும் சில வயது வித்தியாசங்கள் தான் இருக்கிறது. அதனாலயே இப்படி ஒரு தகவலும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஒரு வழியாக குடும்பஸ்தனாக மாறிய பிரேம்ஜி

Next Story

- Advertisement -