கல்யாணத்துக்கு பின் டோட்டலா மாறிய பிரேம்ஜி.. கூட்டாளிகளிடமே மறைத்த முத்தின கத்திரிக்கா

Premji love affair: கிட்டத்தட்ட 46 வயதில் கல்யாணம் பண்ணி இருக்கிறார் பிரேம்ஜி. இது இவருக்கு முதல் கல்யாணம்தான். கங்கை அமரனின் வாரிசான இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ஒரு காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். வெங்கட் பிரபுவுக்கு கூட பிறந்த தம்பி தான் பிரேம்ஜி. பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்களில் இவரை பார்க்கலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் கோலாகலமாக பிரேம்ஜியின் கல்யாணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். வைபவ், அரவிந்த் என சென்னை 600028 பட கூட்டாளி நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

எப்பொழுதுமே தன்னை முரட்டு சிங்கிளாக காட்டிக் கொள்வார் பிரேம்ஜி. 46 வயதிலிலும் கல்யாணம் ஆகாமல் செம கெத்தாக ஊர் சுற்றி வந்தார். ஆனால் இப்பொழுது திருமணம் ஆகி சர்வமும் அடங்கி போய் உள்ளார். வீட்டில் தான் பெண் பார்த்துள்ளனர் என அனைவரும் எதிர்பார்க்கையில் எல்லோருக்கும் பிரேம்ஜி பெரிய ஷாக் கொடுத்துள்ளார்.

கூட்டாளிகளிடமே மறைத்த முத்தின கத்திரிக்கா

இது காதல் திருமணமாம். இன்ஸ்டாகிராமில் எங்களுக்குள் இரண்டு வருடங்கள் “லவ்” என்று நண்பர்களுக்கே பிரேம்ஜி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவர்கள் காதல் கதையை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக யாருக்கும் தெரியாமல் வளர்த்து வந்துள்ளனர். மேலும் அவருடைய ஃபியான்சி வங்கியில் வேலை செய்கிறாராம்.

திருமணத்திற்கு முன்பு எப்படியும் வருடத்திற்கு மூன்று, நான்கு முறை நண்பர்களுடன் கோவா சென்று விடுவாராம் பிரேம்ஜி. கோவா சென்றாலே தலைகீழாத்தான் நடப்பாராம். பார்ட்டி, பப், கும்மாளம் என குறைந்தது 10 நாட்கள் கோவாவில் கூத்து அடிப்பாராம்.

இவர்களது காதல், கல்யாணம் ஆக கூடிவரும் நேரத்திலிருந்து பிரேம்ஜி முற்றிலுமாக மாறிவிட்டாராம். டோட்டலா பார்ட்டிகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும் கம்மி பண்ணி விட்டாராம். மனைவி சொல்லே மந்திரம் என முற்றிலும் பிரேம்ஜி இடம் பல மாற்றங்கள் தெரிகிறதாம்.

Next Story

- Advertisement -