திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

கதிர் தர்ஷினியின் நிலைமைக்கு காரணமான கருப்பு ஆடு.. குணசேகரன் கூட உறவாடி கெடுக்க போகும் மெய்யப்பன்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் நம்பிக்கையான உறவாக இருந்த கதிர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வருகிறார். அந்த வகையில் அண்ணன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி சித்தப்பா என்கிற பாசத்தில் தர்ஷினி மீது அக்கறையாக பேசுகிறார். ஆனால் இதை எதிர்பார்க்காத குணசேகரன் வழக்கம்போல் கதிரை திட்டி விட்டு பாசக்கார அண்ணனாக ஓவராக சீன் போட்டு விட்டார்.

பின்பு வீட்டிற்கு போன குணசேகரன், விசாலாட்சி இடம் கதிர் பேசியதை அனைத்தையும் ஜான்சி ராணி சொல்லிவிடுகிறார். அதன் பின் உச்சகட்ட ஆவேசத்திற்கு போன விசாலாட்சி அருவாவை எடுத்துட்டு வந்து குணசேகரனிடம் கொடுத்து எந்த மருமகளும் தேவை இல்லை எல்லாத்தையும் உண்டு இல்ல ஆகிடுன்னு உசுப்பேத்தி விடுகிறார்.

அந்த நேரத்தில் கதிர் மற்றும் ஞானம் வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் குணசேகரின் அம்மா எப்பொழுதும் போல மூத்த மகனுக்கு சப்போர்ட் பண்ணி பேசி கதிரை திட்டுகிறார். அத்துடன் நந்தினிக்கு போன் பண்ணி எல்லோரையும் இங்க வர சொல்லு என்று சொல்கிறார். உடனே கதிரும், நந்தினிக்கு போன் பண்ணி உங்களுக்கு என்ன தெரியும் ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து சேருங்க என்று கூப்பிடுகிறார்.

Also read: குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்

இதற்கு நந்தினி பார்த்து கிழிச்சீங்க, நாங்களே பார்த்துகிறோம் என்கிற மாதிரி தர்ஷினியை தேட போய்விட்டார்கள். இதற்கிடையில் தர்ஷினியை கடத்தும் பொழுது பக்கத்தில் இருக்கும் வீட்டின் கேமராவில் ரெக்கார்ட் ஆகியிருக்கிறது. அதை வைத்து தர்ஷினியை தேடுவதற்கு அனைவரும் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டிற்கு கிருஷ்ணசாமி மற்றும் ராமசாமி வருகிறார்கள்.

வந்ததும் குணசேகரன் இவர்களிடம் உதவி கேட்கும் வகையில் கெஞ்சுகிறார். அதுமட்டுமில்லாமல் தர்ஷினி எங்கே இருப்பார் யார் அனுப்பி வைத்தார் என்கிற விவரமும் எனக்கு தெரியும். நீங்கள் இருவரும் எனக்கு உதவி பண்ணினால் போதும் என்று குணசேகரன் கேட்கிறார். அந்த வகையில் குணசேகரன், ஜீவானந்தம் பேரை சொல்லி உதவி கேட்கிறார்.

இதற்கிடையில் இவர்கள் வந்ததற்கு பிறகுதான் மர்மமான முறையில் கதிரும் தாக்கப்பட்டிருக்கிறார். தற்போது தர்ஷினியும் கடத்தப்பட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் கதிர் மற்றும் தர்ஷனின் நிலைமைக்கு கருப்பாடாக இருந்து எல்லாத்தையும் செய்கிறது மெய்யப்பன் குடும்பத்தில் உள்ள கிருஷ்ணசாமி. அதற்கு காரணம் கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன் குடும்பத்தை காலி பண்ண வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன தடங்கல்களை செய்து அதை சரி செய்யும் விதமாக குணசேகரன் கூட இருந்து உறவாடி கெடுக்கப் போகிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்

- Advertisement -spot_img

Trending News