Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மத்த சேனலின் டிஆர்பி-ஐ நொறுக்க கலாநிதி மாறன் போட்ட ஸ்கெட்ச்.. ஜெயிலர் தேதியை லாக் செய்த சன் டிவி

ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவையும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.

jailer-audio-launch

Jailer Rajini: ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் நாளுக்கு நாள் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரஜினி, சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. ஆகையால் ஜெயிலர் படத்தைப் பற்றிய அனைத்து சாட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி தான் பெற்றிருக்கிறது.

Also Read : குணசேகரன் வீட்டு மருமகள்கள் வாடிவாசல் தாண்டி வந்தாச்சு.. இனி ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட்க்கு பஞ்சமே இருக்காது

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவையும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்பட்டு வரும். ஆனால் ஜெயிலர் ஆடியோ லான்ச் வீடியோக்கள் பகிரக்கூடாது என சன் பிக்சர்ஸ் காப்பி ரைட் வாங்கி இருக்கிறது.

ஆகையால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடந்த விஷயங்கள் செய்தி வாயிலாக மட்டுமே ரசிகர்கள் சென்றடைந்துள்ளது. எனவே காணொளியாக அதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : புருஷன் முன்னாடியே காதலை சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு வந்த நெஞ்சுவலி

ஏற்கனவே எதிர்நீச்சல் தொடரால் சன் டிவி டிஆர்பி முன்னிலை வகித்து வருகிறது. இதை எப்படியாவது தும்சம் செய்ய வேண்டும் என பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டாலும் எதுவும் செல்லுபடி ஆகவில்லை. இந்த சூழலில் ஜெயிலர் ஆடியோ லான்ச் ஒளிபரப்பானால் இன்னும் சன் டிவியின் டிஆர்பி உச்சம் தொட வாய்ப்பிருக்கிறது.

இதன் மூலம் சன் டிவிக்கு பெரிய தொகை லாபமாக கிடைக்க இருக்கிறது. மேலும் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு முன்பு இருந்ததை விட சற்று கூடுதலாக இருக்கும். மேலும் இதற்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் அனைவருமே ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : டிஆர்பி இல்லாததால் பிரபல சீரியலை ஊத்தி முடிய சன் டிவி.. எதிர்நீச்சல் போல புத்தம் புது என்ட்ரி

Continue Reading
To Top