வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

Thalaivar 172: ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ரஜினியின் படத்தை இயக்குவதற்கு டாப் டைரக்டர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயிலர் ரிலீசுக்கு முன்பே முடிவான படம் தான் லைக்கா, ஞானவேல் கூட்டணியில் ரஜினி நடிப்பதாக ஒப்பந்தமானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஏற்கனவே லோகேஷ் கமலுக்கு விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த நிலையில் ரஜினியுடன் இவர் சேர்ந்தால் கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

இந்நிலையில் லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் ரஜினி இணைய உள்ளார். அதுவும் தலைவர் 172 படத்தை எதிர்பார்க்காத இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். லைக்கா, சன் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்குப் பிறகு வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் ரஜினியின் 172வது படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான். கமலுக்கு வேட்டையாடு விளையாடு என்ற ஹிட் படத்தை கௌதம் மேனன் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தின் ரீ ரிலீஸ் சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது.

Also Read : என்னோட ஸ்கிரிப்ட்ல விஜய்யா இருந்தா கூட தலையிடக்கூடாது.. 5 பேருக்கு ரூல்ஸ் போடும் லோகேஷ்

இந்த சூழலில் ரஜினியுடன் முதல் முறையாக கௌதம் மேனன் இணைய உள்ளார். இப்போது இயக்குனர் என்பதை காட்டிலும் நடிகராக பல படங்களில் கௌதம் மேனன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதுவும் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்த சூழலில் சிம்புவின் அடுத்தடுத்த படங்களை இயக்கிய கௌதம் மேனன் இப்போது ரஜினி படத்தை இயக்க உள்ளதால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரை வைத்து கௌதம் மேனன் எந்த ஜானரில் படம் எடுக்கப் போகிறார் என்ற யோசனையும் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Also Read : 72 வயதிலும் 1200 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் ரஜினி.. ரெண்டு வருடத்தில் 4 படங்களில் பிசி

- Advertisement -

Trending News