என்னோட ஸ்கிரிப்ட்ல விஜய்யா இருந்தா கூட தலையிடக்கூடாது.. 5 பேருக்கு ரூல்ஸ் போடும் லோகேஷ்

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த அளவுக்கு சிறந்த படைப்பாளியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு தன்னுடைய கதைகளில் எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களுக்காக மாற்றி விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர். இவருடைய படங்களில் எல்லாமே அவருடைய கதை மட்டுமே இருக்குமே தவிர, முன்னணி நடிகர்களுக்காக எதையுமே மாற்றிக் கொள்ளாதவர். இதுதான் அவருடைய வெற்றிக்கு முதல் காரணம்.

லோகேஷின் ஐந்தாவது படமாக ரிலீஸ் ஆக இருப்பது தான் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகள் முடிந்து தற்போது எடிட்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது பற்றிய சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Also Read:ஒரு வழியா கழுகுக்கு நாள் குறித்த விஜய்.. மிரட்டப் போகும் லியோ ஆடியோ லான்ச்

சென்னையில் மிகப் பிரபலமான ஹோட்டல்தான் சோமர் செட். பல சினிமா பிரபலங்களும் இங்கு வந்து போவது உண்டு. ரஜினி, கமல் போன்றவர்களுக்கு இது இரண்டாவது வீடு போன்றது. பார்ட்டிகள் மட்டும் இல்லாமல் தங்களுடைய படங்களுக்கான கதை விவாதங்கள் மற்றும் முக்கியமான விஷயங்களை கூட பிரபலங்கள் இங்கு வந்து தான் பேசுவார்கள்.

சென்னையில் மிகப் பிரபலமான ஹோட்டல்தான் சோமர் சாட். பல சினிமா பிரபலங்களும் இங்கு வந்து போவது உண்டு. ரஜினி, கமல் போன்றவர்களுக்கு இது இரண்டாவது வீடு போன்றது .பார்ட்டிகள் மட்டும் இல்லாமல் தங்களுடைய படங்களுக்கான கதை விவாதங்கள் மற்றும் முக்கியமான விஷயங்களை கூட பிரபலங்கள் இங்கு வந்து தான் பேசுவார்கள்.

Also Read:மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்த லியோ.. மிரட்டும் புது போஸ்டர்

இப்போது லியோ படத்திற்கான எடிட்டிங் வேலைகளும் இங்கு இருக்கும் ஒரு ரூமில் தான் நடைபெற்று வருகிறதாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைமையில் இந்த வேலைகள் இப்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த அறைக்குள் செல்ல யாருக்குமே உரிமை கிடையாதாம். லோகேஷ் குறிப்பிட்ட இந்த மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் உடன் வேலை பார்க்கும் எடிட்டர்கள் ரெண்டு பேர் மற்றும் கதையின் ஹீரோ தளபதி விஜய்க்கு மட்டுமே இந்த அறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். இதிலும் நடிகர் விஜய், லோகேஷ் உடன் வந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியுமாம். தளபதி விஜயாய் இருந்தாலும் தன்னுடைய ஸ்கிரிப்டில் யாரும் தலையிடக்கூடாது என்பதில் லோகேஷ் உறுதியாக இருக்கிறார்.

Also Read:மாஸ் லுக்கில் தளபதி.. வைரலாகும் லியோ புதிய போஸ்டர்

- Advertisement -