பிரபல நடிகை அக்கட தேசத்தில் வாய்ப்பு கிடைக்க கொடி கட்டி பறந்தாலும் இங்கு அவரது மார்க்கெட் சரிவு தான். பெரிய ஹீரோக்கள் எல்லாம் இளம் நடிகையுடன் தான் ஜோடி போட்டு நடிப்பேன் என்று கராராக சொல்லியதால் நடிகைக்கு வாய்ப்பு சுத்தமாக குறைந்து விட்டது. அதனால் இங்கு கிடைக்கும் படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இரண்டாம் தர பட்டியலில் உள்ள ஹீரோவுடன் நடிகை கூட்டணி போடுவதாக அறிவிப்பு வெளியானது. இவருடனா நடிகை நடிக்கிறார் என எல்லோரும் ஆச்சரியத்தில் இருந்தனர். ஆனாலும் நடிகை வேறு வழியில்லாமல் இந்த படத்தை புக் செய்திருந்தார். ஆனால் இயக்குனரால் இப்போது நடிகை பின்வாங்கி விட்டார்.
Also Read : இறந்த பின்பும் இரையாக்கப்பட்ட நடிகை.. பீதியை கிளப்பிய தோழி
அதாவது தொடர்ந்து இயக்குனர் நடிகைகளை டேமேஜ் செய்து வருகிறார். ஏற்கனவே ஒரு நடிகையை திரையில் மோசமாக காட்டி இருந்தார். இதனால் நடிகைக்கு அதன் பிறகு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார். மேலும் இயக்குனர் எடுத்த படம் எதுவுமே பெரிய அளவில் போகவில்லை.
அதுவும் இவர் ஏடாகூடமான ஆள் என்பதால் நடிகையை தாராள கவர்ச்சி காட்ட சொல்வாரோ என்ற பயமும் நடிகைக்கு வந்து விட்டது. ஏற்கனவே நல்ல கதை தேர்ந்தெடுத்து கதாநாயகி முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருவதாக நடிகைக்கு கொஞ்சம் பேர் இருக்கிறது. இவருடைய படத்தில் நடித்தால் மொத்தமும் போய்விடும்.
இதனால் சுதாகரித்துக் கொண்ட நடிகை ஜகா வாங்கி விட்டாராம். இப்போது பெரிய வாய்ப்பு கிடைத்தும் நழுவ விட்டு விட்டோமே என்று இயக்குனர் தவித்துக் கொண்டிருக்கிறார். பரவாயில்லை நமக்குன்னு ஒரு ஆடு சிக்காமல் போய்விடும் என்று வேறு ஒரு நடிகையை வலைவீசி தேடி வருகிறாராம்.
Also Read : வாய்ப்புக்காக நேக்கா வலை விரித்த நடிகை.. பொண்டாட்டியை மறந்து காலடியில் மயங்கி கிடக்கும் நடிகர்