சந்திரமுகியாக மிரட்ட வரும் ஹோம்லி நடிகை.. ஜோதிகாவின் இடத்தைப் பிடிப்பது ரிஸ்க்குதான் அம்மணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி வாசு இறங்கியுள்ளார். சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. சந்திரமுகி படத்தில் நடித்தது போலவே வடிவேலு இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதில் முதலில் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் த்ரிஷா ஒரு சில காரணங்களால் இப்படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

அதன்பிறகு ராஷ்மிகா மந்தனாவை அணுகியுள்ளார் பி வாசு. ஆனால் ராஷ்மிகா கதையில் சில மாற்றங்கள் சொன்னதால் இயக்குனர் அவரை நிராகரித்துவிட்டார். இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லட்சுமி மேனன் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அந்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் விக்ரம் பிரபுவின் புலிகுத்தி பாண்டி மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அந்தப் படமும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு கிடைத்துள்ளதால் இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது. ஆனால் ஜோதிகாவின் இடத்தை இவரால் நிரப்ப முடியுமா என்பது சந்தேகம்தான். மேலும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 15ஆம் தேதி மைசூர் அரண்மனையில் தொடங்க உள்ளது.

Next Story

- Advertisement -