நடிகையிடம் மயங்கி கிடந்த 57 வயது நடிகர்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ராசி, தெளிந்த போதை

57 வயதாகியும் முரட்டு சிங்கிளாக கெத்து காட்டி வரும் அந்த நடிகர் சமீப காலமாக இளம் நடிகையின் காலடியிலேயே மயங்கி கிடக்கிறாராம். இருவரும் பொது இடங்களில் கூட ஒன்றாக சுற்றி திரிவதைப் பார்த்த பலரும் பல விதமாக பேசி வந்தனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த ஜோடி ஓவர் நெருக்கம் காட்டி வந்தனர்.

ஆனால் இப்போது நடிகர், நடிகையின் மயக்கத்தில் இருந்து முழுவதுமாக தெளிந்து விட்டாராம். ஏனென்றால் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது. ஆனால் ஒரே ஒரு பாடல் காட்சி மொத்த எதிர்பார்ப்பையும் காலி செய்து ட்ரோல் செய்யப்பட்டது.

Also read: நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

இப்படி எல்லோரும் கழுவி ஊற்றிய நிலையில் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம். இதனால் நடிகர் இப்போது செம அப்சட்டில் இருக்கிறாராம். அந்த நேரம் பார்த்து நடிகையின் ராசி தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று யாரோ பத்த வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே குழம்பிப்போன குட்டையாக இருந்த நடிகர் இப்போது நடிகையின் பக்கமே போகக்கூடாது என முடிவெடுத்து விட்டாராம். ஏனென்றால் நடிகையின் ராசி அந்த அளவுக்கு மீடியாக்களில் வெகு பிரபலமாக இருக்கிறது. ஆரம்பத்தில் சில வெற்றி படங்களை கொடுத்தாலும் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்து வருகிறது.

இத்தனைக்கும் டாப் ஹீரோக்களுடன் தான் அவர் ஜோடி போட்டு வருகிறார். அப்படி இருந்தும் இவரின் ராசியால் தான் படம் ஊத்திக் கொள்கிறது என்ற ஒரு பேச்சு நிலவுகிறது. இருந்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வந்த நடிகை மீண்டும் தலை தூக்கி இருக்கும் இந்த ராசி பிரச்சனையால் நொந்து போய்விட்டாராம். இனிமேல் வாய்ப்புகள் கிடைக்குமா என்ற கவலையிலும் அவர் இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: திருமணம் செய்தும் திருந்தாத நடிகை.. உல்லாசமாக இருந்து சம்பாதித்த கேவலம்

Next Story

- Advertisement -