மார்க்கெட் குறைந்தாலும் அலப்பறை குறையல.. வடிவேலு பாணியில் இம்சை பண்ணும் நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடியனாக தனக்கென ஒரு உடல் மொழியை வைத்து அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்தவர் வடிவேலு. இவருக்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்த வடிவேலு கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இதற்கு காரணம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இவர் நடந்து கொண்ட முறைதான். சம்பள விஷயம் மற்றும் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது என்பது போன்ற பல புகார்கள் இவர் மீது எழுந்தது. இதனால் அவருக்கு சினிமா துறையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள வடிவேலு பரபரப்பாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு எந்த அளவுக்கு அலப்பறை கொடுத்தாரோ அதேபோன்று தற்போது ஒரு காமெடி நடிகரும் அலப்பறை கொடுத்து வருகிறாராம்.

காமெடி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இன்று ஒரு ஹீரோவாக மாறி இருக்கும் சந்தானம் தான் அது. காமெடி நடிகர்கள் பலரும் இப்போது ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார்கள். அதேபோன்று நடிகர் சந்தானமும் நடித்தால் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து நடித்து வருகிறார்.

ஆனால் அப்படி அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது படப்பிடிப்பு தளங்களில் ஓவர் இம்சை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் முழுக்க சூட்டிங் நடக்கிறது என்றால் அதில் இவர் சில மணி நேரம் கூட நடிப்பது கிடையாது. மேலும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வருவதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ரொம்பவும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

அது மட்டுமல்லாமல் இவரால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டமும் ஏற்பட்டு வருகிறதாம். பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பாளர் தற்போது சந்தானத்தை கூப்பிட்டு இப்படியே சென்றால் வடிவேலு நிலைமை தான் உங்களுக்கு கிடைக்கும் என்று பகிரங்கமாக கூறினாராம்.

ஆனாலும் அவர் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளாமல் இருப்பது திரையுலகில் அவருக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களும் தற்போது நிறையவே யோசித்து வருவதாக ஒரு பேச்சு கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது.

Next Story

- Advertisement -