சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரஜினி, கமல் விரும்பிய நடிகையை அசால்டாக தூக்கிய ஹீரோ.. பலான விஷயம் தெரிந்து எஸ்கேப்பான ஹீரோயின்

ஒரு காலத்தில் தன் குழந்தை தனமான பேச்சாலும், நடிப்பாலும் திரையுலகையே கட்டிப் போட்டிருந்தார் ஒரு நடிகை. ரசிகர்களை மட்டுமல்லாமல் டாப் நடிகர்களை கூட தன் பின்னால் சுற்ற வைத்த பெருமை அந்த ஹீரோயினுக்கு உண்டு. அவ்வளவு ஏன் இவருடைய கால்ஷூட்டை வாங்குவதற்காக தவம் இருந்த நடிகர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மிகப்பெரும் பெருமைக்குரியவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கிய இவர் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவரை அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இப்போது பல ஹீரோயின்கள் ஓவர் பந்தா காட்டி வரும் நிலையில் மீனா தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாராம்.

Also read: வளர்த்து விட்டவர்கள் எல்லாம் கை விரித்த பரிதாபம்.. மொத்த சருக்களுக்கு காரணமாய் அமைந்த ரஜினியின் படம் 

அதனாலேயே பல நடிகர்கள் இவரிடம் காதல் வலையை வீசியதுண்டு. ஆனால் அதற்கெல்லாம் மசியாத மீனா சில காலங்கள் பிரபுதேவாவின் காதல் வலையில் சிக்கி இருந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போது கொஞ்சம் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிலும் அந்த படத்தில் வரும் பாடல் காட்சிகளில் இந்த ஜோடி ரொம்பவும் நெருக்கம் காட்டி நடித்திருப்பார்கள். அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன்பே இவர்கள் இருவரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Also read: சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

ஆனால் டபுள்ஸ் திரைப்படத்தில் தான் அவர்கள் ஓவர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மீனாவுக்கு நெருக்கமான பலர் பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என்று ஏகப்பட்ட புகார்களை கூறியிருக்கின்றனர்.

அதிலும் இவருடன் இணைந்து நடித்த காயத்ரி ஜெயராம், ராதிகா சௌத்ரி, சங்கீதா போன்ற நடிகைகள் அவருடைய விஷயத்தை புட்டு புட்டு வைத்திருக்கின்றனர். இதையெல்லாம் கேட்டு அதிர்ந்து போன மீனா இப்படி ஒரு வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுத்து பிரபுதேவாவிடமிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார். அதன் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் சில வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Also read: மீனாவை குஷிப்படுத்த கலா மாஸ்டரின் சூப்பர் பிளான்.. மொத்த திரையுலகிற்கும் அழைப்பு

- Advertisement -

Trending News