பாண்டியனை கைக்குள் போட்டு ஓவராக ஆட்டம் ஆடும் தங்கமயில்.. மாமனாரிடம் அவஸ்தைப்படும் ராஜி மீனா

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், ராஜீ இனி டியூஷன் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் சொன்னது கூட சாதாரணமாக சொல்லாமல் பெரிய தப்பு பண்ணியது போல் ராஜியை திட்டி விட்டு குடும்பத்தில் இருப்பவர்களை வச்சு செய்யும் அளவிற்கு பாண்டியன் ஆட்டம் ஆடிவிட்டார்.

ஆனால் இதற்குப் பின்னணியில் இருந்து கலகத்தை மூட்டியது தங்கமயில் தான் என்று கதிருக்கு புரிந்து விட்டது. அதனால் கதிர், இனிமேல் இந்த மாதிரி பண்ணாதீர்கள், அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று தங்கமயில் இடம் சொல்லிவிட்டார். உடனே தங்கமயில் மதியம் வழக்கம்போல் சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகிறார்.

புலம்பி தவிக்கும் பாண்டியனின் மருமகள்கள்

அப்பொழுது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கதிர் என்னிடம் இந்த மாதிரி கோபமாக பேசி விட்டார் என்று புலம்புகிறார். உடனே சரவணன் அவன் சாதாரணமாக தான் சொல்லி இருப்பான், இதை பெரிசு படுத்தாதே என்று சொல்கிறார். ஆனால் தங்கமயில் அதெல்லாம் இல்லை நீங்கள் கண்டிப்பாக உங்கள் தம்பி கதிரிடம் ஏன் இப்படி பேசினாய் என்று கேட்கணும் என்று சொல்கிறார்.

உடனே சரவணன், சரி நீ அழாத நான் அவனிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். இதனை அடுத்து தங்கமயில், பாண்டியன் கடைக்கு சாப்பாடு எடுத்துட்டு போகிறார். அங்கே போனதும் வழக்கம் போல் மாமனாருக்கு ஐஸ் வைக்கும் விதமாக ரொம்ப பொறுப்பான மருமகளாக சீன் போடுகிறார். பிறகு பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொள்ளும் பொழுது அனைவரும் என்னிடம் கோபமாக இருக்கிறார்கள்.

அதுவும் ராஜி டியூஷன் எடுத்ததை நான் உங்களிடம் சொன்னது தவறு என்று நினைக்கிறார்கள் என சொல்லி உங்களுக்கு தெரியாமல் ஒரு விஷயம் நடந்தால் அது தப்புதான மாமா. அதுதான் நான் உங்களிடம் சொன்னேன் என்று நல்ல மருமகள் மாதிரி பாண்டியையும் கைக்குள் போட்டு விட்டார். உடனே பாண்டியன் நீ எதை நினைத்தும் கவலைப்படாதம்மா, நீ நல்லது தான் பண்ணுவ, நீ செய்துதான் சரி என்று ஒத்து ஊதி விட்டார்.

இதனை தொடர்ந்து மீனா ட்ரைனிங் முடிந்துவிட்டு ரூமுக்கு வந்து விடுகிறார். பின்பு செந்தில் உடன் சேர்ந்து வெளியே சுற்றிவிட்டு ஊருக்கு போகலாம் என்று ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் செந்திலுக்கு பாண்டியன் போன் பண்ணி தொடர்ந்து வேலைகளை கொடுத்து மீனாவுடன் வெளியே போகாதபடி செய்து விட்டார். இதனால் கடுப்பில் இருக்கும் மீனா, செந்தில் மீது கோபத்துடன் இருக்கிறார்.

அந்த நேரத்தில் ராஜி, மீனாவுக்கு போன் பண்ணி மாமா என்னுடைய டியூஷனுக்கு சங்கு ஊதி விட்டார். இனி என்னால் டியூஷன் எடுக்க முடியாது கதிருக்கும் உதவ முடியாது என்ற புலம்புகிறார். உடனே மீனாவும், நானும் இங்கே ஆசைப்பட்ட மாதிரி வெளியே போக முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் செந்திலுக்கு அவருடைய அப்பா இங்கே நிறைய வேலையை கொடுத்திருக்கிறார்.

அதனால் வந்ததிலிருந்து செந்தில் அந்த வேலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று புலம்புகிறார். ஆக மொத்தத்தில் வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் பண்ணாமல் வந்ததால் மாமனார் நம்ம ரெண்டு பேரையும் வச்சு செய்கிறார் என்று மீனா மற்றும் ராஜி புலம்பிக்கொண்டு அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பளங்கள்

Next Story

- Advertisement -