சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கும் லோகேஷ்.. விக்ரமை விட 10 மடங்கு பயங்கரமாக இருக்கும் லியோ

Leo Movie: இன்றைய இளைய தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது சினிமா கேரியரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். மாநகரம் தொடங்கி விக்ரம் வரை இவரது கிராஃப் ஏற்றத்தை தான் சந்தித்து வருகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் லியோ படத்தில் இணைந்து இருக்கிறார். எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. ஆனால் இப்போது ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் லோகேஷ், நெல்சன் போன்ற இயக்குனர்களின் போக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

Also Read : சஸ்பென்சை உடைக்க இதுதான் காரணம்.. லியோவில் கிளைமாக்ஸ் காட்சி இவ்வளவு நேரமா? பறக்க போகும் விசில் சத்தம்

இதுவரை ரஜினியை பொறுத்தவரையில் ஆக்சன் படங்களில் நடித்தாலும் வன்முறை நிறைந்த காட்சிகளை தனது படத்தில் வைக்க மாட்டார். ஆனால் ஜெயிலர் படத்தில் மிகவும் வன்முறையான சம்பவங்கள் இடம் பெற்றது. இதனால் குழந்தைகளுடன் பெற்றோர் இந்த படத்தை பார்க்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.

அதேபோல் தான் லோகேஷின் கைதி படத்தில் தொடங்கி விக்ரம் படத்தில் எக்கச்சக்க வன்முறை காட்சிகளை வைத்திருந்தார். சமூகப் பொறுப்பே இல்லாமல் படத்தை எடுத்து வருகிறார். அதுவும் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல புகைபிடிப்பது, மது போன்ற காட்சியில் நடிக்காமல் இருந்த ஹீரோக்களையும் இப்போது அந்த காட்சியில் நடிக்க வைத்து விட்டார்.

Also Read : அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்.. லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி

அதுவும் விஜய் சிகரெட் பிடிக்கும் படி லியோ படத்தில் இடம் பெற்ற காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியான நிலையில் வன்முறை காட்சி பயங்கரமாக இடம் பெற்றிருந்தது. அதுவும் விக்ரம் படத்தை விட பத்து மடங்கு அதிகமான வன்முறைக் காட்சி லியோ படத்தில் இடம் பெற்று இருக்கிறதாம்.

கஜானா மட்டும் நிரம்பினால் போதும் என லோகேஷ் இவ்வாறு தொடர்ந்து வன்முறை காட்சிகளை எடுத்து வருவது அடுத்த தலைமுறையினர் மிக மோசமான இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த படங்கள் வெற்றி பெற்றால் மற்ற இயக்குனர்களையும் இதே போன்ற படத்தை தான் எடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : அஜித்தை எப்படி கபாலியோட ஒப்பிட முடியும்.. மீண்டும் ரஜினியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

- Advertisement -