அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்.. லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி

Actor Ajith and Dhanush: தற்போது இயக்குனர்களில் அதிக டிமாண்டுடன், ரசிகர்கள் விரும்பி பார்க்கும் இயக்குனராக லோகேஷ் வருகிறார். இவருடைய வித்தியாசமான கதையும், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளும் பார்ப்பவர்களை பிரம்மிப்பாக வைக்கிறது. அத்துடன் இவர் படம் எடுத்தால் அது செம ஹிட் ஆகி வசூல் அளவிலும் பெருத்த லாபத்தை கொடுத்து விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக இவர் யாரை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்று பல கேள்விகளை எழுப்பிகிறது. ஆனாலும் இவர் கதையில் எப்படியாவது நடித்த ஆக வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் முக்கிய நடிகர்கள் அனைவரும் லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Also read: விளம்பரத்திற்கு மட்டும் பல கோடியை வாரி இறைக்கும் லோகேஷ்.. கழுகின் வசூலை முறியடிக்க போடும் திட்டம்

ஆனால் இதுவரை லோகேஷ் யாருக்கும் சரியான பதிலை சொல்லாமல் மௌனமாக இருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் யூகித்து வைத்தது லோகேஷின் அடுத்த படம் ரோலக்ஸ் அல்லது கைதி 2 இருக்கலாம் என்று. இதற்கிடையில் தனுஷை வைத்து ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஆசை லோகேஷ்க்கு இருக்கிறது.

அத்துடன் இப்படத்தை தனுஷை மட்டும் வைத்து இயக்கினால் போதாது என்று நினைத்து அஜித்தையும் இதில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற புது யோசனையாக சிந்தித்து வருகிறார். ஒருவேளை இவர்கள் கூட்டணி உறுதியாகிவிட்டால் கண்டிப்பாக லியோ மற்றும் ஜெயிலர் படத்தின் வசூலை விட இரட்டிப்பாகும் என்பது நிச்சயம்.

Also read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

ஆனால் இது எப்படியும் தொடங்குவதற்கு தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் முடிய வேண்டும், அதே நேரத்தில் தனுஷின் 50 வது படத்தையும் முடித்த பிறகு தான் இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் லோகேஷ் இன்னொரு படத்தை எடுத்து முடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்தபடியாக லியோ மற்றும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ஜெயிலர் படத்தின் வசூல்கள் அனைத்தையும் தாண்டி எதிர்பார்க்காத வெற்றியை இப்படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான வித்தியாசமான யோசனையும், கதையையும் லோகேசால் மட்டும் தான் எடுக்க முடியும்.

Also read: இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் லோகேஷ்.. ரிலீசுக்கு முன்பே ஒரு கோடிக்கு பார்ட்டி வைக்கும் பிரபல இயக்குனர்

Next Story

- Advertisement -