சஸ்பென்சை உடைக்க இதுதான் காரணம்.. லியோவில் கிளைமாக்ஸ் காட்சி இவ்வளவு நேரமா? பறக்க போகும் விசில் சத்தம்

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தை பற்றி சுவாரசியமான விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. லோகேஷின் படங்கள் எப்போதுமே வித்தியாசமான கோணத்தில் தான் இருக்கும். யாரும் இதுதான் அடுத்து என கணிக்க முடியாதபடி தான் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் லோகேஷின் படங்கள் மிகவும் வேகமாக நகரும். அடுத்தடுத்து சஸ்பென்சால் ரசிகர்களை திக்கு முக்காட செய்துவிடுவார். அதேபோல் தான் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சூர்யாவின் கதாபாத்திரத்தை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். ஆனால் சிலரால் அந்த சஸ்பென்ஸ் உடைய ட்ரெய்லரில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை லோகேஷ் கொண்டு வந்திருந்தார்.

Also Read :  அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்.. லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி

ஆனால் லியோ படத்தின் ஆரம்பம் முதலில் சஸ்பென்ஸ் ஒவ்வொன்றையும் லோகேஷ் உடைத்து வருகிறார். சஞ்சய் தத் முதல் மன்சூர் அலிகான் வரை இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவே காட்டிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தையும் படக்குழு ரிவில் செய்து வருகிறது.

சமீபத்தில் கூட அர்ஜுனின் பிறந்த நாளுக்கு அவருடைய கதாபாத்திரத்திற்கு உண்டான வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என்று பார்த்தால் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. மேலும் லோகேஷ் சாதாரணமாக எந்த விஷயத்தையும் செய்து விடமாட்டார்.

Also Read : லியோ படத்தின் ஹைப்பை அதிகரிக்க செய்த வேலை.. நாலா பக்கமும் அடிபட்டு வரும் விக்ரம்

அந்த அளவுக்கு லியோ படத்தில் பயங்கரமான காட்சிகள் இடம்பெற இருக்கிறது. அதாவது இப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அட்டகாசமாக இருக்குமாம். அவெஞ்சர் எண்டு கேம் படத்தில் எப்படி 30 நிமிடங்களுக்கு மேலாக கிளைமாக்ஸ் காட்சிகள் போய்க்கொண்டிருக்குமோ அதேபோல்தான் லியோ படத்திலும் உள்ளதாம். ஆகையால் அந்த 20 நிமிடங்கள் கண்டிப்பாக தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும்.

ஆகையால் படத்தில் இதேபோன்று நிறைய ஆச்சரியம் தரும் விஷயங்கள் அமைந்திருப்பதாக தெரிகிறது. லியோ ட்ரெய்லரில் எதிர்பார்க்காத பல விஷயங்களை லோகேஷ் உள்ளடக்கி உள்ளாராம். ஜெயிலர் வசூலை மிகக் குறுகிய நாட்களிலேயே லியோ படம் கண்டிப்பாக முறியடிக்கும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

Also Read : லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

Next Story

- Advertisement -