புகழின் உச்சத்தை தொட்டாலும் தலைவருடன் நடிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்கள்.. ரஜினிக்காக போட்டி போட்ட நடிகைகள்

Tamil Heroine – Rajini: தமிழ் சினிமாவில் பெயரோடும் புகழோடும் கதாநாயகிகள் பலரும் தனக்கென ரசிகர்களை கொண்டு வலம் வந்தனர். அதில் சிலரால் மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கடைசி வரைக்கும் நடிக்க முடியாமல் போனது. என்னதான் அவர்கள் புகழ்பெற்று இருந்தாலும் கூட, சில நடிகைகள் ஒரு படம் கூட அவருடன் நடிக்கவே முடியாமல் போனது. அப்படி ரஜினிகாந்த் உடன் நடிக்க முடியாமல் போன நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

ஊர்வசி: 80-90களில் ரசிகர்களிடையே பேமஸாக இருந்தவர்தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழில் “முந்தானை முடிச்சு’ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது 10 வயதில் இருந்தே நடிக்க துவங்கி விட்டார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். இருப்பினும் இவர் தமிழில் இதுவரை ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவே இல்லை.

Also Read: தனி ஒருவன் 2க்கு வில்லனாக பாலிவுட் ஜாம்பவான்.. சஞ்சய் தத், ஜாக்கி செராப் வரிசையில் வரும் கமல் ஜெராக்ஸ்

சுகன்யா: சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சுகன்யா. அவரும் இதில் ஒருவர் தான். இவர் கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளார். இருந்தாலும் கடைசிவரை ரஜினிகாந்த் உடன் இணைந்து இவருக்கு ஒரு படம் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அசின்: எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசினும் இதில் ஒருத்தர். தமிழில் இவர் நடித்து வெளியாகும் படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக சொல்லப் போனால் சிவகாசி, வரலாறு, கஜினி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் கூறலாம்.இவருக்கு ரஜினியுடன் நடிக்க மிகவும் ஆசை. ஆனால் தற்போது வரை சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

Also Read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

தேவயானி: சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் தேவயானி . இவர் தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கூட தலைவர் ரஜினிகாந்த் உடன் ஒரு படம் நடிக்க கூட இவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இவரின் கடைசி படம் வரை இணைந்து நடிக்க வாய்ப்பே அமையாமல் போனது.

சினேகா: புன்னகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சினேகாவும் இதில் ஒருத்தர். என்னவளே என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இவருக்கு ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க கோச்சடையான் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அப்பொழுது இவர் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார். ரஜினியுடன் இணைந்து நடிக்க இவருக்கு கொடுத்துவைக்கவில்லை.

Also Read: அதிக பிரசங்கி தனத்தை ஓரம் கட்டிய நெல்சன்.. மிஸ் ஃபயர் ஆன விஷயங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி

கிரண்: “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கிரணும் இந்த லிஸ்டில் ஒருவர். இவர் அதனைத் தொடர்ந்து அன்பே சிவம், அரசு போன்ற பல தமிழ் படங்கள் நடித்துள்ளார். தமிழில் முன்னணி பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஒரு வாய்ப்பு கூட, இவரின் கேரியரில் கிடைக்காமல் போனது.

- Advertisement -