அதிக பிரசங்கி தனத்தை ஓரம் கட்டிய நெல்சன்.. மிஸ் ஃபயர் ஆன விஷயங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி

Director Nelson: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் பட்டி தொட்டி எல்லா பக்கங்களிலும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இயக்குனராக நெல்சன் ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். எத்தனை பேர் உன்னை பார்த்து தோற்றுப் போய்விட்டாய் என்று சொன்னாலும் உன் தோல்வியை நீயாய் ஒத்துக் கொள்ளும் வரை போராடு என்று சொல்வதுண்டு.

அதை தான் தற்போது நெல்சன் சாதித்துக் காட்டியிருக்கிறார். இவர் ஜெயிலர் படத்திற்கு முன் விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் படம் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார்கள். ஆனால் அதை மறக்கடிக்கும் விதமாக தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டார்.

Also read: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதனை படைத்த நெல்சன்.. பிக் பாஸால் கூட உடைக்க முடியாத டிஆர்பி தெரியுமா?

இன்னும் சொல்லப்போனால் வாரிசு படத்தை விட பீஸ்ட் படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே விஜய்க்கு தான் செட் ஆகாமல் போய்விட்டது. அதற்கு எந்த விதத்திலும் நெல்சன் பொறுப்பாக மாட்டார். காரணம் அவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் இரண்டுமே விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.

இதற்கிடையில் பீஸ்ட் படம் வந்த பொழுது நெல்சனை அதிகமாக சமூக வலைதளங்களில் கலாய்த்து வந்தனர். அதற்கு நான் பொறுப்பில்லை என்பதற்கேற்ப விஜய்யை வைத்து ஓவராக அதிக பிரசிங்கத்தனம் செய்து வந்தார். அத்துடன் நெல்சனின் தற்பெருமையும், ஓவர் நம்பிக்கையும் தான் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Also read: டார்க் காமெடிக்கு தரமான ஹீரோவை தட்டி தூக்கிய நெல்சன்.. சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது, மாஸ் கூட்டணி

ஆனால் தற்போது நெல்சன் ரொம்பவே பக்குவமான மனுஷனாக மாறிவிட்டார். அதற்கு காரணம் தோல்வி இவருக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் எக்கச்சக்கம். அதனாலேயே ஜெயிலர் படம் இவ்ளோ வெற்றி அடைந்த பிறகும் ரொம்பவே அடக்கி வாசித்துக் கொண்டு வருகிறார். இதுவும் ஒரு விதத்துக்கு நல்லது தான்.

ஏனென்றால் எப்போதுமே வெற்றியை தலைக்கு மேல் கொண்டு போக கூடாது என்று சொல்வார்கள். அதை சரியாக புரிந்து கொண்டு எப்படி வெற்றியை நோக்கி பயணிப்பது மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார். ஒரு தடவை சறுக்கியதால் பலமுறை வெற்றி பார்க்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறார் நெல்சன். அதற்கு ஒரு உதாரணமாக தான் ரஜினியை வைத்து சாதித்து காட்டியிருக்கிறார்.

Also read: ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

- Advertisement -