ஹாலிவுட்டை மிஞ்சிய தமிழ் சினிமா.. அதிகரிக்கும் இளைஞர்களை சீரழிக்கும் பலான காட்சிகள்

ஹாலிவுட் படங்களில் லிப் லாக் காட்சிகள், ஆடையின்றி நடிப்பது என்பது ஒரு சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைத்தால் சென்சாரில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஆரம்பத்தில் இயக்குனர்கள் இதுபோன்ற காட்சிகள் எடுக்காமல் நாகரீகமாக படங்களை இயக்கி வந்தனர்.

ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட்டை மிஞ்சிய காட்சிகள் வைக்கப்படுகிறது. அதுவும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இளைய சமுதாயம் மிகப்பெரிய சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நடிகை அமலாபால் ஆடை என்ற படத்தில் ஆடையின்றி நடித்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இதை தொடர்ந்து பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் இதுபோன்ற காட்சியில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது பார்த்திபன் இயக்கி இருக்கும் இரவின் நிழல் படத்தில் நடிகை பிரகிடா ஆடையே இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனாலும் அந்த காட்சி கவர்ச்சியாக தெரியாது என்ற பார்த்திபன் சொன்னாலும் பலரும் இதை விமர்சித்து தான் வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் ஆடையின்றி சண்டையிடும் காட்சிகள் அமைக்கலாம் என இயக்குனர் முடிவு செய்திருந்தார். ஆனால் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக முடிவை மாற்றிக் கொண்டார்.

ஒருவேளை இயக்குனர் யோசித்தபடி அந்த காட்சியை அமைத்து இருந்தால் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான். அண்மையில் லைகர் படத்தின் போஸ்டரில் உடம்பில் துணி இன்றி விஜய் தேவர்கொண்டா ரோஜா பூங்கொத்துடன் இருப்பது போன்று வெளியாகியிருந்தது.

மேலும் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆடை இன்றி ஃபோட்டோஷூட் எடுத்திருந்தார். அதை அப்படியே தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கும் விதமாக விஷ்ணு விஷாலும் இதுபோன்று போட்டோ ஷூட் எடுத்திருந்தார். ஹாலிவுட், பாலிவுட்டில் இது சகஜம் என்றாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் தற்போது அது பறிபோய் உள்ளது என்பதே நிதர்சனம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்