புதன்கிழமை, நவம்பர் 13, 2024

பறக்க ஆசைப்பட்டு கொஞ்சநஞ்சம் இருக்கிறதையும் இழந்த 5 சூப்பர் நடிகர்கள்.. உலகநாயகனே ஒதுக்கிய அந்த இளம் புயல்

உலகில் முதலில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி ஒரு சில படங்கள் ஹிட் ஆன உடனேயே, “கோடினா வாடி இல்லாட்டி போடி” என்கிறார்கள் இளம் நடிகர்கள். அவர்களில் சிலர்

மணிகண்டன்: மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மணிகண்டன், “இந்தியா பாகிஸ்தான், காதலும் கடந்து போகும்” போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் எட்டு தோட்டாக்கள் படத்தில் வில்லன்களில் ஒருவராகவும், காலாவில் ரஜினியின் மகனாகவும் நடித்த மணிகண்டன். புஷ்கர் காயத்திரியின் விக்ரம் வேதாவில் வசனகர்த்தாவாகவும் அவதாரம் எடுத்தார். ஜெய் பீம் படத்தில் இவரது ராஜாக்கண்ணு கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சமீபத்தில் மீதா ரகுநாத்துடன் இணைந்து நடித்த “குட் நைட்” படம் ஹிட்ஆனதை தொடர்ந்து அடுத்த படத்திற்கு ஒரு கோடி கேட்கிறாராம்.

பிரதீப் ரங்கநாதன்: “யாரும் எதிர்பாராத கதையை உருவாக்கி, எதிர்பாராமல் ஹிட் அடிக்கும்” பிரதீப் ரங்கநாதன். ஷார்ட் பிலிம்ஸ் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவர் இயக்கிய கோமாளி படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படமான “லவ் டுடே”  படத்தில் தானே இயக்கி நடிப்பதாக அறிவித்தார். பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும் நடிப்பதில் உறுதியாக இருந்து படத்தை ஹிட் செய்தார். குறைந்த பொருட்செலவில் தயாரித்த இப்படம் 80 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இவரின் அடுத்த படம் கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இப்படத்தில் தனக்கு சம்பளமாக 20 கோடி வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அடுத்து கமல் ஷாக் ஆகி இப்படத்திலிருந்து விலகி உள்ளார்.

Also Read:சம்பள விஷயத்தில் கரார் காட்டும் பிரதீப்.. கழட்டிவிட்ட கமல்

கவின்: பிக் பாஸ் மூலமாக பிரபலமான கவின் “லிப்ட், டாடா” என போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதன்பின் தனது சம்பளத்தை 1.5 கோடியாக உயர்த்திய கவின். அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாபி சிம்ஹா:  சினிமாவில் ஆரம்பத்தில்  சிறு வேடங்களில் என்ட்ரி கொடுத்த பாபி சிம்ஹா, சூது கவ்வும் மற்றும் நேரம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இவர் நடித்த  ஜிகர்தண்டா படத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருந்தார். இப்படத்தில் இருந்து இவரது மார்க்கெட் ஏறியது. இப்படத்திற்காக பெஸ்ட் சப்போட்டிங் ஆக்டர் கான தேசிய விருதையும் வாங்கினார். அதன் பின் இவர் நடித்த சில படங்கள்  தொடர்ந்து தோல்வியை தழுவின. இருந்த போதும் தனது சம்பளத்தை 3 கோடி வரை பிக்ஸ் பண்ணி உள்ளதால் சிறு பட்ஜெட் இயக்குனர்கள்  இவரின் பக்கம் திரும்புவதில்லை.

மகத்: மங்காத்தா படத்தின் மூலம் பலருக்கும் பரிச்சயமான மகத், “பிரியாணி, ஜில்லா,வடகறி,வந்தா ராஜாவாகத்தான் வருவேன்” போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.கொரோனா கடலுக்கு காலகட்டத்தில் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட மகத். தற்போது மீண்டும் தன் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி உள்ளார். இப்போது கைவசம் படங்கள் இல்லாவிட்டாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் வெப் சீரிஸில்  அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

Also Read:அரசியல் பிளானோடு காத்திருக்கும் 5 நடிகர்கள்.. 2026 தேர்தலை நோக்கி நகரும் தளபதி

- Advertisement -spot_img

Trending News