திறமை இருந்தும் புகழ் பெறாத 5 நடிகர்கள்.. இப்போது வரை போராடி வரும் அதர்வா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் கதாநாயகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர்கள் பல வருடங்களாக நடித்து நல்ல திரைப்படங்கள் மற்றும் பல வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு என்று தனி அடையாளம் தனியிடம் தமிழ் சினிமாவில் இதுவரை அமையவில்லை, இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில நமக்கு ரொம்ப பரிச்சயமான முகம் உள்ள நடிகர்கள் தற்போது பார்க்கலாம்.

ஸ்ரீ: இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 17/3 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கினுடன் இணைந்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனால் அதற்கு அப்புறம் சரியான வாய்ப்பு அமையவில்லை ஆகையால் பிக்பாஸில் மூலம் முயற்சி செய்தால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பலன் அளிக்கவில்லை இன்று வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: 2010ல் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் வில்லம்பு, பொறியாளன், சட்டப்படி குற்றம் பெரிய வெற்றி பெறவில்லை. பின்பு பிக்பாஸில் இடம் பிடித்து பின்னர் நிறைய நல்ல படங்களை தந்தார். இருந்தாலும். தமிழ் சினிமாவில் இன்று அளவும் சரியான வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அதர்வா: இவர் 2010ல் வெளியான பானாகாத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார் படமும் வெற்றி பெற்றது. ஈட்டி, இரும்புத்திரை, முப்பொழுதும் உன் கற்பனையே,கணிதன் போன்ற வெற்றி படங்களை தந்தாலும் இன்றும் நல்ல ஒரு வெற்றிக்காகவும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தினை பெறவும் காத்துக்கொண்டிருக்கிறார்.

விதார்த்: இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பல படங்களில் வில்லனாகவும் நடித்து வந்தார். சண்டை கோழி, திருவண்ணாமலை நாயகி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். பல முயற்சிக்குப் பிறகு மைனா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று பல திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருகிறார். மிக நல்ல நடிகன் என்ற பெயரை எடுத்தாலும் நல்ல வாய்ப்புக்காக வெற்றிக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் இன்றளவும் அமையவில்லை.

நகுல்: இவர் தேவயானியின் தம்பியாக அனைவரும் அறிந்த முகம். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெற்றி பெற்றார். அதன்பின்பு இவனுக்கு சொல்லும்படியான எந்த படங்கள் அமையவில்லை இருந்தாலும் தற்போது வரை தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியில் காத்துக்கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -