வாழ வைத்தவர்களுக்கு செய்யும் துரோகம்.. அக்கட தேசத்தை தூக்கி நிறுத்த பார்க்கும் ஜீவாவின் சூழ்ச்சி

Actor Jiiva: பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஜீவா அவருடைய அண்ணன் ஜித்தன் ரமேசை விட ஒரு படி மேலே வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது தெலுங்கானாவாக இருந்தாலும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்து உச்சம் பெற்றார்.

இருப்பினும் அக்கட தேசமான தெலுங்கு சினிமாவை தான் தூக்கி நிறுத்த வேண்டும் என தெலுங்கானாவின் பிரபல இளம் அரசியல்வாதியின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி அடுத்த மாதம் படப்பிடிப்பையும் துவங்கப் போகிறார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும், இவரை வாழ வைத்த தமிழ்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள்.

Also Read: சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்கள்.. விஜய் விக்ரமுக்கும் இதே நிலைமைதான்!

அவர்களுடைய படங்களில் எல்லாம் நடிக்காமல் தெலுங்கானாவில் செம பேமஸ் ஆக இருக்கும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் படத்தில் நடிப்பது வாழ வைத்த தமிழ் சினிமாவிற்கு செய்கிற துரோகம் போல் தெரியவில்லையா என்று ஜீவாவை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

இதெல்லாம் ஜீவாவின் சூழ்ச்சி தான் என்றும் திட்டி தீர்க்கின்றனர். நடிகர் ஜீவா அவருடைய தாய் மொழியான தெலுங்கில், தெலுங்கானா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். யாத்ரா 2 என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் தான் இயக்குகிறார்.

Also Read: பூனம் பஜ்வா கவர்ச்சியில் எல்லை மீறிய 5 படங்கள்.. குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்த இளம் நடிகர்

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் படத்தை விறுவிறுப்பாக எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்பு மறைந்த ஆந்திர முதல் மந்திரி ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மஹி வி ராகவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு யாத்ரா என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

இதில் ராஜசேகர ரெட்டி ஆக மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாம் பாகத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கு தமிழக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Also Read: ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

- Advertisement -