புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரிஜினல் யாரு ஜெராக்ஸ் யாருனு குழம்பி போன சூர்யா.. மாதவனை கையெடுத்துக் கும்பிட்ட தருணம்!

தமிழ் சினிமாவில் பெண்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் மாதவன். மின்னலே, அலைபாயுதே என தொடர்ந்து காதல் படங்களை கொடுத்த சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மாதவன் அதிகமாக ஆங்கிலம் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற பயோபிக் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவனும் அவரது மனைவியாக நடிகை சிம்ரனும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது அதே போல் ராக்கெட்ரி படம் 5 மொழிகளில் வெளியாவதால் தமிழ் ரசிகர்களை கவர சூர்யாவும், ஹிந்தி ரசிகர்களுக்காக ஷாருக்கானும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது நம்பி நாராயணனும் இருந்துள்ளார். அப்போது அச்சு அசலாக மாதவனும் நம்பி கெட்டப்பில் இருந்ததால் எது ஒரிஜினல் என்று தெரியாமல் சூர்யா ஒரு நிமிடம் குழம்பிப் போயுள்ளார்.

shooting spot for the movie rocketry

அதன் பிறகு நான் தான் மாதவன் என்பதை அவரை அறிமுகம் செய்த பிறகுதான் சூர்யா அடையாளம் கண்டு கொண்டுள்ளார். தற்போது மாதவன் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சூர்யா, மாதவன் இருவருமே இணைந்து ஆயுத எழுத்து படத்தில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

suriya-madhavan
suriya-madhavan
- Advertisement -

Trending News