இழுபறியில் தத்தளிக்கும் வாடிவாசல்.. வலுவிழக்கும் சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி

Vaadivaasal-Suriya: கங்குவா படத்திற்காக வெறித்தனமாக உழைத்து வரும் சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட சுதா கொங்கரா கூட்டணியில் இவர் நடிக்கும் புறநானூறு பட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்படி என்றால் வாடிவாசல் நிலை என்ன என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

ஏனென்றால் பல மாதங்களாக சூர்யாவின் ரசிகர்கள் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றிமாறன் கூட்டணியில் அவர் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளிவந்தது. அதற்காக சூர்யா சில பயிற்சிகளை மேற்கொண்ட வீடியோவையும் நாம் பார்த்தோம்.

இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கூட்டணி இப்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாடிவாசலில் அமீர் நடிக்க இருப்பது தான். ஏற்கனவே இது உறுதிப்படுத்திய நிலையில் தற்போது அமீர், சிவக்குமார் குடும்ப பஞ்சாயத்து பெரும் கலவரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

Also read: களி மண்ணாய் இருந்தவர்களை செப்பு சிலையாய் மாற்றிய அமீர்.. நன்றி கெட்ட உலகமடா?.

அதனாலேயே சூர்யா தரப்பில் இருந்து அமீர் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் வெற்றிமாறன் அதற்கு சம்மதிக்காத நிலையில் சூர்யா இதிலிருந்து விலகலாம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

மேலும் சூர்யா இதிலிருந்து விலகும் பட்சத்தில் அஜித் அதில் நடிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே வெற்றிமாறன், அஜித் இணையப் போகும் செய்தி மீடியாவில் வைரலாகி வருகிறது. எல்ரெட் குமார் அப்படத்தை தயாரிப்பார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் வாடிவாசலில் சூர்யா தரப்பு கொடுக்கும் பிரச்சனையை பார்த்த வெற்றிமாறன் இப்போது அஜித்தை நடிக்க வைத்து விடலாம் என்று பேசி வருகிறாராம். இப்படி அதிகாரப்பூர்வமில்லாத இந்த தகவல் இப்போது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: அடிமடியில் கை வைத்த வாரிசுகள்.. எவ்வளவு சொல்லியும் சிவக்குமார் பேச்சைக் கேட்காத மாபியா