அடிமடியில் கை வைத்த வாரிசுகள்.. எவ்வளவு சொல்லியும் சிவக்குமார் பேச்சைக் கேட்காத மாபியா

Veteran Actor Sivakumar: கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் கார்த்திக்கு இடையே நல்ல உறவு இல்லை என்பது தெரிந்து வந்தது, அதிலும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அமீருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது இவர்களது பிரச்சனையை உறுதிப்படுத்தி இருந்தாலும், எதனால் இந்த பிரச்சனை என்பது தெளிவாகத் தெரியாமல் இருந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டு என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தான் இன்றைய நிலைமைக்கு சரியாக இருக்கும். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏகத்துக்கும் அமீரை தாறுமாறாக பேச, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் எல்லாம் படையெடுத்து மறுத்தாக்குதல் செய்வார்கள் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்.

Also Read:ஹீரோயின்கள் மத்தியில் அமீர் வளர்த்த கலாச்சாரம்.. கெட்டியாக பிடித்து பெயரைக் காப்பாற்றிய 5 நடிகைகள்

ஒரு பக்கம் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் என்ன நடந்தது என்பதை போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் கரு. பழனியப்பன் ஒரு படைப்பாளிக்கு எதிராக இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது சம்பந்தப்பட்ட சிவகுமார் வாய் திறக்காமல் இருக்கிறாரே என்று ஏகத்துக்கும் சாடி விட்டார்.

கொந்தளித்து போன சிவகுமார்

ஏற்கனவே பருத்திவீரன் பிரச்சனையில் மெதுவாக கேள்விகள் எல்லாம் சூர்யா பக்கம் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், மொத்தமாக சிவகுமார் குடும்பம் என்ற பேச்சும் அடி பட தொடங்கியது. சிவகுமார் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மற்றும் மகா கலைஞர். மேடை ஏறி மகாபாரத கதை பற்றியும், திருக்குறளை பற்றியும் வாழ்க்கை கல்வியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

படைப்பாளிகள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாய் அவர் பக்கம் திரும்பியதும் ரொம்பவே பதறிப் போய்விட்டார் சிவகுமார். ஞானவேல் ராஜாவை நேரில் அழைத்து பயங்கர டோஸ் விட்டிருக்கிறார். இத்தனை ஆண்டு காலமாக என்னுடைய குடும்பம் சம்பாதித்த பெயரை, இப்படி ஒரே பேட்டியில் கெடுத்து விட்டாயே என கொந்தளித்து இருக்கிறார்.

சிவகுமாரின் கோபத்திற்கு ஆளான ஞானவேல் உடனே ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும் என பல மொழி சொல்வார்கள். அந்த வகையில் சமுத்திரகனி பெயருக்கு மன்னிப்பு கேட்பதெல்லாம் இனி ஆகாது. பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்டு, பருத்திவீரன் சமயத்தில் அவர் வாங்கிய கடன்களை செட்டில்மெண்ட் பண்ணுங்கள் என மிரட்டி இருக்கிறார்.

Also Read:அமீர்க்கு ஒன்னுனா நாங்க சும்மா இருக்க மாட்டோம் கௌதம், வீரா.. ராஜனுக்கு வக்காலத்து வாங்கிய 6 பிரபலங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்