களி மண்ணாய் இருந்தவர்களை செப்பு சிலையாய் மாற்றிய அமீர்.. நன்றி கெட்ட உலகமடா?.

Tamil Actors: சினிமாவில் வாரிசு நடிகர்கள் வெகு சுலபமாகவே என்ட்ரி ஆகிவிடலாம், ஆனால் அதன் பிறகு அவர்களது நடிப்பு திறமையால் மட்டுமே காலூன்றி நடிக்க முடியும். அப்படித்தான் இரண்டு வாரிசு நடிகர்கள் ஒரே குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தனர். வந்த புதிதில் களிமண் போல் இருந்த இவர்களை செப்பு சிலையாய் மாற்றிய இயக்குனரையே இப்போது என்ன சங்கதி என கேட்கின்றனர்.

நடிப்பே வராத சூர்யாவிற்கு சிவக்குமாரின் முகத்திற்காகத்தான் இயக்குனர் பாலா தன்னுடைய நந்தா படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சான்ஸ் கொடுத்தார். ஆனால் சூர்யாவால் நந்தா படப்பிடிப்பு தளத்தில் பாலா எதிர்பார்த்த நடிப்பை கொண்டு வர முடியாமல் அதிக டேக் வாங்கினார். இதனால் டென்ஷனான பாலா சூர்யாவை கடும் வார்த்தைகளால் திட்டிவிட்டார்.

இதை எதிர்கொள்ள முடியாத சூர்யா தேமிதேமி ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதார். அப்போதுதான் பாலாவின் உதவி இயக்குனராக நந்தா படத்தில் பணி புரிந்த அமீர் சூர்யாவிடம் வந்து, எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து கரெக்ஷன் செய்தார். அமீர் சொன்னது போலவே சூர்யாவும் தன்னுடைய நடிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து பாலாவிற்கு பிடித்தது போல் நடித்து, நந்தா படத்தில் தன்னை மாஸ் ஹீரோவாக காட்டினார்.

Also Read: கிடைத்த ஹீரோவை வைத்து அமீர் எடுத்த 5 படங்கள்.. அனைத்திலும் முதல் சாய்ஸ் சூர்யா

களி மண்ணாக இருந்த 2 நடிகர்கள்

அதேபோல் தான் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான படம் தான் பருத்திவீரன். இந்த படத்தில் அமீர் ரொம்பவே கஷ்டப்பட்டு கார்த்தியை பிரமாதமாக நடிக்க வைத்தார். அமீர் கஷ்டப்பட்டு சூர்யா, கார்த்தி இருவரின் நடிப்பை தூண்டி விட்டதால்தான் இப்போது கோலிவுட்டில் டாப் 5 நடிகர்களாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர்.

ஆனால் இந்த நன்றி விசுவாசம் இருவருக்குமே இல்லை, இப்போது அமீரை இவர்கள் எதிரி போல் நடத்துகின்றனர். கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் கொண்டாட்டத்தின் போது அமீருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அது மட்டுமல்ல மேடையில் பருத்திவீரன் படத்தை பாதியிலேயே விட்டுட்டு போன ஞானவேல் ராஜாவை தான் கார்த்தி தூக்கி வைத்து பேசினார். ஆனால் அமிர்தான் பருத்திவீரன் படத்தை முழுமையாக தன்னுடைய சொந்த செலவில் கஷ்டப்பட்டு எடுத்து முடித்து ரிலீஸ் செய்தார்.

பின்பும் ஞானவேல் ராஜா அமீரை திருடன், தயாரிப்பாளர்களின் காசை சுரண்ட கூடியவர் என தரக்குறைவாக பேசிய போது கூட கார்த்தி, சூர்யா இருவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சைலன்டாக இருக்கின்றனர். ஆனால் திரை பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர். வளர்த்து விட்ட கெடா மார்பில் முட்டுகிறது என்பது போல தான் கார்த்தி, சூர்யா செய்கிற செயல் இருக்கிறது.

Also Read: அஜித்துக்கு ஞானவேல் ராஜாவே பரவால்ல.. பணத்தை கொடுத்து ஏமாந்த தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்